பௌத்த சமயத்தை பொது பலசேனா துஸ்பிரயோகம் செய்கிறது - ரொஹான் குணரட்ன
பொதுபல சேனா தனது அரசியல் நலனுக்காக பௌத்த சமயத்தினை துஸ்பிரயோகம் செய்து வருகின்றது என சிங்கப்பூர் சர்வதேச கற்கைகள் பாடசாலையின் விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன தெரித்துள்ளார். யாழில் இன்று நடைபெற்ற ‘மீள் இணக்கம் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல்pல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் கூறியுள்ளார்.
பொது பல சேனா சமயம் சார்ந்த அமைப்பு அல்ல. இது அரசியல் அமைப்பு. தனது அரசியல் இலாபத்திற்காக சமயத்தினை துஷ்பிரயோகம் செய்கின்றது இலங்கையில் இனப்பிரச்சினையை உருவாக்கியவர்கள் அரசியல் வாதிகளே தங்கள் சுயநல அரசிலுக்காக இதனை அவர்கள் உருவாக்கினர் என்று நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம்களிடையே நான் வேற்றுமையை காணவில்லை. ஆனால், அரசியல்வாதிகளிடமும் இனத்தவர்களிடமும் வேற்றுமை காணப்படுகின்றதாக கூறுகின்றார்கள்.
அந்தவகையில், 1972ஆம் ஆண்டு முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் நேர்முகத் தேர்வு ஒன்றினை நடத்தும் போது நான் அவரிடம் இனப்பிரச்சினை இருப்பதற்கான காரணத்தினை கேட்டேன். 1956ஆம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டம் உருவாக்கியமையே இனப்பிரச்சினை ஏற்படக் காரணம் என்று அவர் தனது தவறினை ஒத்துக்கொண்டார்’ என ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
தென்னிலங்கையில் ஆயுதக்குழுக்கள் உருவானபோது அதனை அங்குள்ள மக்கள் எதிர்த்தனர். ஆனால் வடக்கில் ஆயுதக்குழுக்கள் உருவான போது மக்கள் ஆதரவு வழங்கியதால் பயங்கரவாதம் உச்ச நிலையை அடைந்தது. கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இன்று மிக சமாதானமான சூழல் காணப்படுகின்றது. யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11,600 பேரில் 4 பேரை தவிர ஏனையோர் சமுதாயத்துடன் இணைக்கப்படுவதை விரும்புகின்றார்கள். அவர்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
‘தமிழ், சிங்கள இனத்தவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும், காலங்கடந்து சென்றாலும், சில செயற்பாடுகளின் மூலம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆயத்தமாக வேண்டும். ஒன்றிணைந்து செயற்படுவது கடினமாக இருந்தாலும், அவற்றினை சமாளித்து இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென்றும்’ அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
Post a Comment