கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் மூடப்பட்டது
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடம் டெங்கு தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதிவரையில் குறித்த பீடத்தை மூட பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட கட்டடத்தின் மூன்றாம் மாடி கூரை இல்லாததன் காரணமாக அங்கு நீர் நிறைந்திருந்தது. இந்த நிலையில் இதனை ஆய்வு செய்த கொழும்பு நகர சபையின் வைத்திய அதிகாரிகள் குழு, அதில் டெங்கு குடம்பிகள் இருப்பதாக கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து சட்ட பீடத்தை மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையில் நேற்று மாலை கூடிய நிர்வாக சபை, சட்டபீடத்ததை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் மூட தீர்மானித்தது. sfm
Post a Comment