Header Ads



அளுத்கமயில் ரயில், வேன் மோதல் - நள்ளிரவில் மக்கள் ஆர்ப்பாட்டம்


அளுத்கம ரயில் நிலையம் அருகில் வேனொன்றுடன் ரயில் மோதியமை தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் L.A.R.ரத்நாயக்க தெரிவித்தார்.

விபத்தில் நேற்று ஐவர் உயிரிழந்திருந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க சிறிவர்தன கூறினார்.

தொடம்கொட பகுதியில் இருந்து யாத்திரை சென்ற குழுவினரே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது. இதேவேளை, விபத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றிரவு பிரதேசவாசிகள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





1 comment:

  1. விபத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டமா?

    ReplyDelete

Powered by Blogger.