'ஆஸாத் சாலியின் கிழக்கு மாகாண விஜயத்தை குழப்புவதற்கு திட்டம்'
அஸாத் சாலியின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறும்.இன்னும் ஓரு சில மணித்தியாலங்களில் அவர் தமது குழுவினருடன் கொழும்பிலிருந்து புறப்படவுள்ளார் என்று அவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அஸாத் சாலியின் விஜயத்தை குழப்பும் வகையில் ஏற்கனவே கிழக்கில் பல கதைகள் கட்டிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவை எதிலும் உண்மை கிடையாது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி அவர் நாளை 28ம் திகதி சாய்ந்தமருதுவிலும், 29ம் திகதி ஓட்டமாவடியிலும் 30ம் திகதி கிண்ணியாவிலும் நிகழ்வுகளில் பங்கேற்பார். இவை தவிர மூதூர் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யுமாறு அந்தப் பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்புக்களையும் அவர் ஏற்றுள்ளார்.உரிய நேர ஒதுக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தப் பகுதிகளுக்கும் விஜயம் செய்ய உத்தேசித்துள்ளார்.
எனவே கிழக்கு மக்கள் கட்டுக் கதைகளை நம்பத் தேவையில்லை. அஸாத் சாலியை சந்திக்க ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு உரிய இடங்களுக்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்வதாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பயப்பட வேண்டாம்! கிழக்கில் குழப்ப (BBS) பொது பல சேனா வராது! (PBS) படையப்பா பல சேனாக்கள்தான் வருவார்கள்!!
ReplyDeleteஉங்களின் வரவு நல்வரவாகட்டும்! எல்லாம் வல்ல அழ்ழாஹ் உங்களை எல்லா வகையிலும் எதிரிகளின் சதிகளில் இருந்து பாதுகாப்பான்!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-