Header Ads



இலங்கைக்கு முஸ்லிம் நாடுகளே அதிகளவில் கடன் வழங்குகின்றன - அமைச்சர் எஸ்.பி.


(ஜே.எம்.ஹபீஸ்)

இலங்கைக்கு அதிகளவில் முஸ்லிம் நாடுகளே கடன் வழங்குகின்றன. இதன் காரணமாக நாம் பெறும் கடனுக்கு வட்டியே வழங்கப்படுவதில்லை. சேவைக்கட்டணமாக 1 சதவீத்திலும் குறைந்த தொகையே செலவாகிறது. என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கா தெரிவித்தார். (1.6.2013) மடவளையில் இடம் பெற்ற வைபவம்ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

2001 ம் ஆண்டு எமது கடன் வீதம் 100 ஆகவும் முறையே அடுத்தடுத்த வருடங்களில் 103,104,106 எனக் கூடிக்கொண்டு போனது. இருப்பினும் இப்போது அது 78 ஆகக் குறைந்துள்ளது.

சர்வதேச கல்வித் தரத்தை நாம் அடைந்து கொள்வதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நாம் முக்கிய பிரஜைகளாக மாறும் நிலை ஏற்படலாம். அதற்கான ஒரு உயர்கல்வி பெற்ற சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.
இன்று சுமார் நான்கு இலட்சம் பேர் தொழில் இன்றி அலைகின்றனர். இது தொழில் இன்மை காரணமாக அல்ல. அரச தொழிலைத் தேடியாகும். அதே நேரம் ஏழு இலட்சம் தனியார் தொழிற்துறைகளில் போதியளவு ஊழியர் இன்றி நாடும் தொழிற்துறையும் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

காரணம் அத்துறைகள் எதிர்பார்க்கும் தகைமைகொண்ட வர்களை நாம் உருவாக்க வில்லை. மறுபுரம் எமது இளைஞர்கள் அரசு துறையில் நியமனம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு பின்வரும் காரணங்களை கூறமுடியும். முதலாவதாக அரச துறை என்பது ஒரு கௌரவமான துறையாகும் என்ற கருதுகோள். இரண்டாவதாக அங்குள்ள தொழிலில் நிரந்தரத் தன்மை உண்டு. மூன்றாவதாக தமக்குத் தேவையான வரப்பிரசாதங்களை அரச துறை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்தையும் விட நான்காவதாக வெறுமனே காலத்தை கடத்தி விட்டு ஊதியம் பெறலாம் என்ற ஒரு நிலையும் உண்டு.

சர்வதேச ரீதியில் உள்ள தொழில் வாய்ப்புக்களில் 99 சதவீதமானவைகள் தனியார் துறை சார்ந்ததாகும். பிரித்ததானியா, ஜேர்மன், பிரான்ஸ், போன்ற நாடுகளில் 1 சதவீதமே அரச துறையாகும். அவஸ்திரேலியாவில் மட்டும் 2 சதவீதம் காணப் படுகிறது. ஆனால் இலங்கையின் மொத்த தொழில் வாயப்;;பில் 15 சதவீதம் அரச துறையாகும். இது ஒரு நாட்டிற்கு நல்ல தல்ல. அரச தெரில் துறை விகிதம் அதிகரிக்க அதிகரிக்க அந்நாட்டு அரசின் சுமைகளும், பொறுப்புக்களும் கடமைகளும அதிகரிக்க ஆரம்பித்து விடும்.

உலக சந்தையின் தொழில் வாய்ப்பு கேள்விற்கேற்ப எமது மாணவர்களையும் தயார் படுத்த வேண்டும். தற்போது உயர் கல்வித்துறைiயில் படிப்படியாக நாம் தாய்மொழிக்கு லேதிகமாக ஆங்கில மொழி பெயர்ப்புக்கனையும் வழங்கி மாணவர்களை அத்துறையில் அறிவுறுத்தி வருகிறோம்.

இலங்கையில் காணப் படுகின்ற மொத்த வேலை வாய்ப்புக்களில் 25 முதல் 30 சதவீதமான வெற்றிடம் சுற்றுலாத்துறை, பாதுகாப்புத் துறை, சுப்பர் மார்க்கட் போன்ற நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பம் போன்ற வற்றில் காணப் படுவதாகக் கூறினார்.

ஒரு காலத்தில் தென் கொரிய நாட்டவர்கள் மூங்கில்கள் மூலம் வள்ளங்களை அமைத்து திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தொழில் தேடினர். இன்று எமது இளைஞர்கள் கொரிய தொழில் வாய்ப்பிற்கு செல்லு மளவு அந்நாடு முன்னேறியுள்ளது.

இலங்கைக்கு அதிகளவில் முஸ்லிம் நாடுகளே கடன் வழங்குகின்றன. இதன் காரணமாக நாம் பெறும் கடனுக்கு வட்டியே வழங்கப்படுவதில்லை. சேவைக்கட்டணமாக 1 சதவீத்திலும் குறைந்த தொகையே செலவாகிறது. 2001 ம்ஆண்டு எமது கடன் வீதம் 100 ஆகவும் முறையே அடுத்தடுத்த வருடங்களில் 103,104,106 எனக் கூடிக்கொண்டு போனது. இருப்பினும் இப்போது அது 78 ஆகக் குறைந்துள்ளது.

எமது நாடு கையாண்ட கல்விக் கொள்ளை காரணமாக ஆங்கிலக் கல்வியை கை விட்டு அதன் பலாபலனை தற்போது அனுபவிக்கிறோம். கணனி, சுகாதாரம், வீழ்ச்சியடைந்த ஆங்கிலக் கல்வியை மீட்டெடுத்தல் முதலான துறைகளில்  நாம் வளர்ச்சி கண்டுள்ள போதும்  பொது அறிவுத் துறையில் தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டு வருகிறோம் என்றார். போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.


No comments

Powered by Blogger.