Header Ads



உரமானியம் கிடைப்பதில் தாமதம் - அம்பாறை விவசாயிகள் அவதி

(யு.எல்.எம்.றியாஸ்)

இம்முறை சிறுபோகம் 2013ல் மகிந்த சிந்தனை மூலம் வழங்கப்படும் உர மானியம் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கிடைக்காமையினால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். 

கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு மொத்தமாக  உரிய காலத்திற்கு வழங்கப்பட்ட மானிய உரம் இம்முறை கட்டம் கட்டங்களாக வழங்கப்படுவதனால் உரிய பயனை பெறமுடியாமல் விவசாயிகள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். விதைத்து 49 நாட்களுக்குள் பாவிக்கப்பட வேண்டிய சில உரவகைகள் விதைத்து 45 நாட்களாகியும் இதுவரைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

காலதாமதமாக கிடைக்கும் உரத்தினால் எதுவித பிரயோசனமும் அடையப்போவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தனியாரிடமும் உரத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கும் இவ்விவ்சாயிகளின் நிலை  கேள்விக்குறியாகவே உள்ளது

அம்பாறை மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் உள்ளது இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை எனவே இம்மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இதனோடு சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா .. ?

No comments

Powered by Blogger.