Header Ads



மாணவனின் பசியைப் போக்கிய ஒரு கிளாஸ் பால், அந்த பெண்ணின் உயிரைக் காப்பற்றியது

(எம்.ஐ. நிஷாம்தீன் + Thnaharan)

பாகிஸ்தான் அரசாங்கம் 3 மில்லியன் ரூபா செலவில் கல்வியில் ஆர்வம் கொண்ட 150 இலங்கை மாணவ, மாணவியருக்கு சாதாரண, உயர்தர கல்வியை 2013 ஜின்னா புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கான நிகழ்வில் உரை நிகழ்த்திய கல்வி அமைச்சின் இணைப்பு பாராளுமன்ற உறுப்பினரான மொகேன் லால் கிரேரோ ஒரு மனதை உருக்கும் உண்மைக் கதையை கூறினார்.

இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் குவாஸிம் குரைஷியின் தலைமையில் ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மொகேன் லால் கிரேரோ அவர்கள் இந்தக் கதையை உணர்ச்சி பூர்வமாக கூறினார்.

“பல வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. இலங்கையில் இருந்து உயர்கல்வி பெறுவதற்கு லண்டன் சென்றிருந்த ஒரு மாணவன் அன்றைய காலகட்டத்தில் பணம் செலுத்தி கல்வி கற்க வேண்டியிருந்தமையால் சிறு தொழில்களை செய்து தனது கல்விக் கான செலவை ஈடு செய்து வந்தான்.

ஒரு நாள் அவனிடம் உணவுக்காக பணம் எதுவும் இருக்கவில்லை. அதனால், பசியில் வேதனைப்பட்ட அந்த மாணவன், ஒரு வீட்டின் கதவைத்தட்டியிருக்கிறான். வீட்டு எஜமானி கதவைத் திறந்த போது, அம்மா எனக்கு தாகமாக இருக்கிறது ஒரு கிளாஸ் தண்ணீர் தாருங்கள் என்று கேட்டிருக்கிறான். அந்த மாணவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, வீட்டுக்குள் சென்று ஒரு பெரிய கிளாஸ் நிறைய பசும்பாலை கொண்டுவந்து கொடுத்து இதைக் குடியென்று கூறியிருக்கிறார்.

மாணவனும் அந்தப் பெண்மணிக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றுவிட்டான். பலவருடங்களுக்கு பின்னர் அந்த பெண்மணி நோய்வாய்ப்பட்டிருந்ததனால் ஒரு பாரிய சத்திரசிகிச்சையை செய்ய வேண்டியிருந்தது. அதற்கான பணத்தை திரட்டுவதாயின் அந்தப் பெண் அவ்வீட் டையே விற்க வேண்டிய கஷ்ட நிலையில் இருந்தார்.

ஆனாலும் வேறு வழியின்றி அந்தப் பெண் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்து குணமானால் தன்னுடைய வைத்திய செலவை சமாளிப்பதற்கு வீட்டை விற்க வேண்டுமென்று நினைத்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணிடம் ஒரு வைத்தியத் தாதி வைத்திய செலவுக்கான ஒரு காகிதத்தை அவளிடம் ஒப்படைத்து விட்டு சென்றாள்.

அந்தக் காகிதத்தை வாசித்த அந்தப் பெண் உண்மையிலேயே மனம் மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். அம்மா, அன்று நான் பசியோடு இருந்த போது நீங்கள் கொடுத்த ஒரு கிளாஸ் பால் என்னை வாழவைத்தது வைத்தியத்துறையில் உயர்பதவி வகிப்பதற்கு உதவியது.

நீங்கள் இந்த சத்திரசிகிச்சைக்கான கட்டணத்தை எனக்கு அன்று கொடுத்த ஒரு கிளாஸ் பால் மூலம் செலுத்திவிட்டீர் கள் என்று எழுதப்பட்டிருந்தது. என்று கூறி திரு கிரேரோ தனது கதையை முடித்துக் கொண்டார். இவ்விதம் தான் நாம் பணத்தை சிக்கனமாக வைத்து கல்விகற்று எங்களுக்கும், மனித குலத்திற்கும் உதவி செய்ய வேண்டுமென்று அவர் அங்கு புலமைப்பரிசில் பெற்ற மாணவ, மாணவியருக்கு வேண்டுகோள் விடுத்து விடைபெற்றார்.

3 comments:

  1. edu eppayo keatta madiri irukku

    ReplyDelete
  2. இதனை இங்கு வாசித்ததை விட நேரில் கேட்டபோது மிகவும் மனதை நெகிழச் செய்தது. எனது மகளுக்கும் இந்தக் கதையை நான் பலமுறை நினைவூட்டி இன்றைய சூழலில் நமக்கு உதவும் இவ்வாறான உதவிகளுக்கு மரணம் வரையிலும் நன்றியும், விசுவாசமும் உள்ளவர்களாக நீங்களும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

    மேலும், இவ்வாறான உதவிகளைப் பெற்று உயர் நிலைக்கு வரும் பெரும்பாலான இளைஞர்கள் தமது உயர்கல்வியில் தேர்ச்சி பெற்று பட்டமும், தொழிலும் கிடைத்த பின்னால் இஸ்லாத்திற்கு முரணான வகையில் சீதனமாக வீடும், நகையும், பணமும், வாகனமும் வாங்கிக் கொண்டு தமது வாழ்க்கையை ஆடம்பரமாக்கிக் கொள்கின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டும் நமது முஸ்லிம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.

    அது மாத்திரமன்றி, இதுவரைக்கும் இவ்வாறான பல நிறுவனங்களின் புலமைப்பரிசில் நிதியுதவிகளைப் பெற்று கல்வி கற்றுத் தேறிய ஏராளமான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், என பல்துறை சார்ந்தவர்கள் பெருகியிருந்தும் இவர்கள் தனிப்பட்ட முறையிலும் வறிய மாணவர்களுக்கு உதவுவதை பரவலாக அறியமுடியாதுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் தனது ஜின்னாஹ் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 150 வறிய மாணவர்களுக்கு தலா 24,000 ருபா வீதம் இம்முறை புலமைப்பரிசில் நிதியுதவி வழங்கியது மிகவுமே பாராட்டுதற்குரியது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. Every body must help each other specialy for education to build muslim community educated. But very rarely only some of us do so. THIS IS SADAKATHUL JAARIYA.
    Lot of us spending money on useless things for community.
    THINK WHAT IS MOST WANTED

    ReplyDelete

Powered by Blogger.