காத்தான்குடியில் முன் அறிவித்தலின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு - மக்கள் விசனம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீடுகளில் இருக்கும் மின்சார பொருட்களான மின்விசிறி,மின்குமிழ்,குளிர்சாதனப் பெட்டி,கணனிகள்,தொலைக்காட்சிப் பெட்டிகள் உட்பட பல்வேறு மின்சாரப் பொருட்களும் பழுதடைவதாகவும் nதிவிக்கின்றனர்.
அதிகமாக காலை நேரங்களில் அடிக்கடி இவ்;வாறான மின் துண்டிப்பு இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment