ஐரோப்பாவிலிருந்து சிரியாவை நோக்கி புறப்படும் ஜிஹாத் போராளிகள்..!
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்துப் போரிடும் போராளிகளில் அயல்நாட்டவர்களும் கலந்துள்ளனர் என்ற தகவல் சிரியாவை மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
அல்- கொய்தாவினால் தயார் படுத்தப்படும் இவர்களில் பலர், ஸ்பெயின் அருகே உள்ள வடக்கு ஆப்ரிக்காவின் சியுட்டா பகுதியிலிருந்தும், மொரோக்கோவின் சிநிடெக் நகரத்திலிருந்து ஸ்பெயின், துருக்கி வழியாக சிரியா செல்வதாகத் தெரிய வந்தது.
நேற்று இதுபோன்ற வேட்டையில் ஈடுபட்டபோது, ஜிகாதிப் போராளிகள் என்று சந்தேகப்பட்ட எட்டு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
இவர்கள் அனைவருமே ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்றும், அல்கொய்தா இயக்கத்தினரால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சர்வதேச தீவிரவாதத்திற்கு இந்த சம்பவம் ஒரு பலத்த அடியாக இருக்கும் என்று ஸ்பெயின் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டியஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோல், 18 வயதுக்குட்பட்ட பலர் அல்கொய்தா போர்வையில் வெளியே சென்றுள்ளனர் என்றும், மேலும் பலர் தற்கொலைப் படைத் தாக்குதலிலும், பலர் ஆயுதமேந்திய போராட்டங்களிலும் பங்கு பெற பயணித்துள்ளனர் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. மேலும் பலர் துருக்கி வழியாக ஸ்பெயினிலிருந்து சிரியாவிற்கு செல்லலாம் என்றும், அதுகுறித்து தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தகவல் அளிக்கப்பட்டது.
Post a Comment