'முஸ்லீம் சமுகத்திற்காக எனது உயிரைக் கொடுக்க தயார்' ஓட்டமாவடியில் ஆஸாத் சாலி
(நஷ்ஹத் அனா)
இன்று நாட்டில் ஆளுந்தரப்பில் உள்ளவர்களுக்கு ஆஸாத் சாலி என்ற பெயரைக் கேட்டாலே போதும் பயப்படுகின்றார்கள் எனது பெயருக்கு ஏன் ஏன் இவ்வாறு பயப்படுகின்றார்கள் என்று எனக்குத் தெரியாது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமாகிய ஆஸாத் சாலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் நேற்று (29.06.2013) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் கூட்டம் நடத்தப் போகிறேன் என்றால் அக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு பின்னர் ரத்துச் செய்யப்படுகின்றது கூட்டம் நடக்கும் என்று சொல்லப்படுகின்ற இடத்திற்கு ஓயில் தார் போன்றவற்ரைத் தெளிக்கின்றனர் இவ்வாறு எனது பெயருக்கு ஏன் பயப்படுகின்றார்கள் நான் மந்திரியோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ இல்லை என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆஸாத் சாலிக்கு முஸ்லீம்கள் மத்தியில் ஏன் முஸ்லீம் சகோததர்களிடம் வந்து கருத்துக்களைச் சொல்ல முடியாது நான் இன்று வந்தது பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்த வேளை எனக்காக தொழுது துஆச் செய்து நோன்பு நோற்ற மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கவே வந்தேன் இந்த நாட்டில் நன்றி தெரிவிப்பதற்குக் கூட சந்தர்ப்பம் இல்லை.
இன்று நாட்டில் முஸ்லீம்களுக்குத்தான் பிரச்சினை தலைதூக்கியுள்ளது தமிழ் மக்களுக்கு இருந்த பிரச்சினை முடிவடைந்து வரும் சந்தர்ப்பத்தில் முஸ்லீம்களுக்கான பிரச்சினை எழுந்துள்ளது பள்ளி வாயல்களை உடைப்பது, பர்தாவை கழட்டுவது, இறைச்சிக் கடைகளை மூட வைப்பது, மாடு அறுக்கக் கூடாது என்று சொல்வது என்று பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே போகின்றது. இப் பிரச்சினைகளுக்கெலல்லாம் தீர்வு மிக விரைவில் வரும்.
முஸ்லீம் சமுகத்திற்காக எனது உயிரைக் கொடுக்கவும் தயாராகத்தான் இருக்கிறேன் சமுகத்திற்காக எனது உயிர் பரிக்கப்படுமாக இருந்தால் அதைவிடப் பெருமை எனக்கு வேறு எதுவும் கிடையாது. அரசாங்கத்தில் இருந்து சமுகத்திற்காக பதவி பட்டங்களை தூக்கி எரிந்து விட்டே வந்துள்ளேன் இன்று அரசாங்கத்தோடு இருக்கும் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் சமுகத்திற்காக துணிந்து கதைக்கின்றார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
முஸ்லீம் வங்கியில் முஸ்லீம்கள் போட்ட பணத்தையே மோசடி செய்தவர்களும் மறைந்த தலைவரின் பணத்தை நம்பிக்கைக்கு துரோகம் செய்த கொள்ளையிட்டவர்களும் சமுகத்தைப் பற்றி நியாயம் கற்பிக்க முயற்சிக்கின்றமை கவலையாகவுள்ளது. முஸ்லீம்களுக்கு எங்கு பிரச்சினை நடந்தாலும் அப் பிரச்சினையை தட்டிக் கேட்கும் முதலாவது நபராக நான் நிற்பேன் அவ்வாறு நிற்பதால்தான் மக்கள் சந்திப்புக்கள் இடம் பெறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றன.
நாங்கள் முஸ்லீம்களாக இருக்கின்றோம் சிலர் பொது பலசேனாவாக இருக்கின்றார்கள் அவ்வாரானவர்கள் வருகைக்கு எதிப்புத் தெரிவிக்கின்றனர் இவ்வாறு சமுகத்தைக் காட்டிக் கொடுக்ககும் அநேகம் பேர் நம் சமுகத்தில் இருக்கின்றனர் அதனால்தான் நமக்கு வரும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆஸாத் சாலியின் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு ஒயில் தெளித்து அந்த இடத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் ஓட்டமாவடி சுற்றுவட்டச் சந்தியில் ஆஸாத் சாலியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு குழுவினரால் எதிர்ப்பு வசனங்களை எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் ஆஸாத் சாலியின் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
இந்த ஆசாத் என்பவர் யார் என்று புரிய மிக நீண்ட நாட்கள் தேவையில்லை.
ReplyDeleteஅசாத் சொல்கின்றார், மறைந்த தலைவர் அஷ்ரப் NUA என்ற கட்சியை ஆரம்பித்து எல்லா இன மக்களையும் அரவணைத்து செல்ல எண்ணியிருந்தார். ஆகவே அவரின் கனவை நிறை வேற்ற உங்கள் பேராதரவுடன் என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று சாய்ந்தமருதிலே வைத்து சொல்கின்றார். இவரும் ஏனைய கட்சிகள் மாதிரி அஷ்ரபை விற்று வைற்றுப்பிழைப்பு நடத்தலாம் என்று நப்பாசையாக நினைக்கின்றார்.
மறைந்த தலைவர் உயிருடன் இருக்கும் போது, அந்த SLMC கட்சியை ஒரு மட்டக்கழப்பானின் கட்சி, மட்டக்கழப்பானின் தலைவர் என்று பார்த்து ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் பிறந்து வழர்ந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் இந்த மாபெரும் கரியன் இந்த அசாத் சாலி. இவரிடன் நல்ல பண்புகள் எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது.
சமூகத்துக்காக குரல் கொடுத்தார் என்பது அவரின் அரசியலை தக்கவைக்க கொடுத்த குரலே அல்லாமல் சமூக விடுதலைக்காக அல்ல.
முஸ்லிம்களின் ஒற்றுமைப்படுத்தல் என்பதற்கு அப்பால், முஸ்லிம் சமூகத்தை குழப்பி, பிரித்து துண்டாடி, மேலும் ஒரு பத்தோடு பதிநோண்டாக ஒரு வக்கற்ற கட்சி ஆக்க நினைக்கின்றார் இந்த அசாத் சாலி. முஸ்லிம் சமூகம் ஏமாந்து விட வேண்டாம்.
Slahi you are wrong if you say like this you leader R/hameed also from that people how can he lead a mattakkalappan party, do not direct the people towards the wrong path, allah will help you.
ReplyDeleteநீ முஸ்லிம் சமூகத்தின் சிங்கம்டா ஆஸாத்!
ReplyDeleteஅதான் தேவாங்குகள் எல்லாம் உன் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்குகின்றன! ஓட்டமாவடியில் உன்னைக் கணடதும் ஓடி ஒழிந்து கொண்டன!
-புவிறஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
SLAHY You are Muslim .................?????????????????????????????????
ReplyDeleteஅப்போ ஹிஜாப் வேண்டாம் , புர்கா வேண்டாம் , இறைச்சிக்கடை வேண்டாம் என்று சொல்லும் சிங்களவர்களுக்கு ஆதரவான முஸம்மிலுக்கு ஏமாந்து கொள்ளுங்கள் .
ReplyDeleteஎவராக இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைக்காக போராடும் எமது சகோதரர்களை ஆதரிப்போம் !
Hi Friends,
ReplyDeleteபிறக்கும்போதே முஸ்லீம்களைக் காப்பாற்றுவதற்காகவே யாரும் பிறப்பதில்லை.
அசாத் சாலி மட்டுமல்ல நமது நாட்டிலுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளிலே யாருமே 100 வீதம் சரியானவர்களுமல்ல. அவர்கள் அரசியல் நிலைப்பாடுகளிலே இருவிதமான போக்குகளைக் கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் ஆரம்பத்திலே தங்களது சமூகத்திற்காக வீராவேசம் பேசிவிட்டு பின்பு காலப்போக்கிலே வசதிக்கும் சலுகைகளுக்கும் சோரம் போவதுண்டு.
சிலர் ஆரம்பத்திலே அவ்வாறான தடுமாற்றங்களைக் கொண்டிருந்துவிட்டு பின்பு தட்டுத்தடுமாறி சரியான பாதைக்கு வருவதுமுண்டு.
யார் எப்படியோ இன்றைய காலத்திற்கு எப்படியானவர்கள் நமக்கு அவசியம் என்பதை மக்கள்தான் புத்திசாதுரியமாக முடிவுசெய்ய வேண்டும்.