வெலிகமையில் 'அல் அஸீஸிய்யா தஃவா பவுண்டேஷன்'
(நாகூர் ழரீஃப்)
தஃவா மற்றும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கான 'அல் அஸீஸிய்யா ஃபவுண்டேஷன்' தென் மாகாணத்தின் தென்றல் கொளிக்கும் நகரான வெலிகமையில் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் உதயமாகவுள்ளது.
இலங்கையின் சன்மார்க்கக் கல்வியின் கலாபீடங்களும் நிறுவணங்களும் தென் மாகாணத்திலேயே ஆரம்பமாயின. இன்றும் பல கலாபீடங்களும் தஃவா நிறுவணங்களும் ஆங்காங்கே தமது கல்விப் பணிகளைச் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் மற்றுமொரு கல்வி மற்றும் தஃவாவை மையமாகக் கொண்ட ஒரு நிறுவணமே 'அல் அஸீஸிய்யா' வாகும்.
மேற்படி ஃபவுண்டேஷன் அல் ஆலிம் தராதரம் பெற்று வெளியாகும் இளம் ஆலிம்களுக்கான ஒரு மேற்கல்விக் களமாக செயற்படவுள்ளது. இதன் பாட நெறிகள் ஒரு வருட வதிவிடக் கற்கை நெறியைக் கொண்டது.
'தவ்றத்துல் ஹதீஸ்' எனும் ஹதீஸ் துறையிலான விஷேட கற்கை நெறியை முதற் தரமானதாகக் கொண்டாலும், அறபு, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிற் தேர்ச்சி, அல் குர்ஆனியக் கலைகளில் விஷேடத் தேர்ச்சி, நிர்வாகத் துறை விஷேட கற்கை, இந்து, பௌத்தம் மற்றும் கிறிஸ்தவ மத ஒப்பீட்டாய்வுக் கற்கை, இஸ்லாமியப் பொருளியல் (இஸ்லாமிய வங்கி முறை) போன்ற விஷேடத் துறைகள் மற்றும் கலைகள் போதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மலோசியாவில் இயங்கும் ஒரு பிரபல பல்கலைக் கலகத்தில் மேற்படி 'அல் அஸீஸிய்யா' வின் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்கான சிபாரிசு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்படி நிறுவணத்தின் கௌரவத் தலைவர் அல் ஹாஜ் ஸலூல் கரீம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
'அல் அஸீஸிய்யா' வில் இணைந்து கற்ககும் மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. 30 ஆலிம்களே முதல் குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவர். இந்நிறுவணத்தில் இணைந்து கற்க விரும்பும் இளம் ஆலிம்கள் எதிர் வரும் ஷஃபான் மாதத்தின் பிறை 15 க்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு :
அஷ் ஷைக் ஏ. ஏ. அலி அஹ்மத் (ரஷாதீ).
அதிபர்,
அல் அஸீஸிய்யா தஃவா ஃபவுண்டேஷன்,
தொ.பே : 0094 - 777662852
Post a Comment