கல்முனையில் சஹிரியன்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்தான முகாம் (படங்கள்)
(ஏ.எல்.ஜுனைதீன்)
கல்முனை அஷ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து சஹிரியன்ஸ் கல்வி, சமூக அபிவிருத்தி அமையம் ( ZESDO ) ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஒன்று இன்று (2013.06.30 ஆம் திகதி) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியிலிருந்து கல்முனை ஸாஹிறாக் கல்லூரி தேசிய பாடசாலை நடைபெற்றது.
பிரஸ்தாப அமைப்பின் அங்கத்தவர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்கள்.
“எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கின்றாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல்-குர்ஆன் 5:32) என்ற வசனமும் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
Post a Comment