Header Ads



மொஹமட் சியாம் படுகொலை குற்றவாளிகள் பல கொலைகளுடன் தொடர்பு

வெள்ளவத்தை பிரதேசத்தில் கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதிக்காவற்துறை மா வாஸ் குணவர்தன கைதுசெய்யப்படுவதற்கு முன்னர், கைதுசெய்யப்பட்ட உப காவற்துறை அதிகாரி உட்பட 04 பேருக்கு மேலும் பல கொலைகளுடன்  சம்பந்தப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உதவி காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்தார்.

இதனிடையே இந்த கொலை தொடர்பாக பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், குறித்த குற்றச் செயல் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சப்தீன் முன்னிலையில் மேலதிக அறிக்கையுடன் மேற்படி இரண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது இதனை  அறிவித்த ஷானி அபேசேகர,  சந்தேக நபர்களிடம் உரிய முறையில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

கொலை செய்வதற்காக நபர்களை கடத்திச் செல்லல்,  ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணத்திற்காக கொலை செய்த ஆகியன தொடர்பில் கண்டறியப்பட்ட பல குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்  கைதுசெய்யப்பட்டுள்ள பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்;.

கைதுசெய்யப்பட்ட அனைத்து காவற்துறை அதிகாரிகளும், சந்தேக நபரான பிரதிக்காவற்துறை மா அதிபரின் கீழ் பணியாற்றியவர்கள் எனவும் விசாரணைகள் மூலம் அவர்கள் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்த அபேசேகர,  கொலைகளுக்கு பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள், இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.