Header Ads



பாகிஸ்தானின் அசாத் ராப் அம்பயர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தானின் அசாத் ராப், ஐ.சி.சி., "எலைட் பேனல்' அம்பயர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். 
பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப், 57. ஐ.சி.சி., ( சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த அம்பயர் குழுவில்(எலைட் பேனல்) இருந்தார். இவர், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. 
இந்நிலையில், ஐ.சி.சி.,யின் "எலைட் பேனல்' அம்பயர் குழுவில் இருந்து அசாத் ராப், நியூசிலாந்தின் பில்லி பவுடன் நீக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து ஐ.சி.சி., "எலைட் பேனல்' அம்பயர் தேர்வுக்குழு தலைவர் ஜெப் அலர்டிஸ் கூறுகையில்,""இந்த ஆண்டின் "எலைட் பேனல்' பிரிவுக்கான அம்பயர்களை (2013-14) தேர்வு செய்ய, கடந்த 12 மாதங்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சூதாட்ட சர்ச்சையில் அசாத் ராப் சிக்கியது பற்றி பரிசீலிக்கவில்லை. நீக்கப்பட்ட அசாத் ராப், பில்லி பவுடனுக்கு பதில் இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த், ஆஸ்திரேலியாவின் பால் ரீபிள் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளோம்,'' என்றார். 
ரிச்சர்டு இல்லிங்வொர்த் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் 2010, ஜூலை முதல் சர்வதேச அம்பயராக உள்ளார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான பால் ரீபிள், 2009 ஜனவரி முதல் அம்பயராக பணியாற்றி வருகிறார். 
இந்தியர் இல்லை:
தற்போதைய ஐ.சி.சி., "எலைட் பேனல்' அம்பயர்கள் குழுவில் இந்தியா சார்பில் யாரும் இல்லை. இதில் இடம் பெற்றுள்ள 12 அம்பயர்கள்:
 அலீம் தர்(பாக்,), தர்மசேனா(இலங்கை), ஸ்டீவ் டேவிஸ்(இங்கிலாந்து), மரைஸ் எராஸ்மஸ்(தெ.ஆப்ரிக்கா),டோனி ஹில்(நியூசி.,) இயான் கோல்ட்(இங்கிலாந்து), ரிச்சர்டு கெட்டில் பரோ(இங்கிலாந்து), நிஜல் லாங்(இங்கிலாந்து) புருஸ் ஆக்சன்போர்டு(ஆஸி.,), ராட் டக்கர்(ஆஸி.,), ரிச்சர்டு இல்லிங்வொர்த்(இங்கிலாந்து), பால் ரீபிள்(ஆஸி.,).

No comments

Powered by Blogger.