கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்களின் சர்வதேச சாதனையை பாராட்டி கௌரவம்
(அலியார் பைஸர்)
மலேசியா லூயி பெட்மின்டன் அகடமியில் இடம்பெற்ற பெட்மின்டன் பயிற்சி மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு கல்முனை பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்த கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் 11 பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 13-062013 கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை பெட்மின்டன் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் சர்வதேச பெட்மின்டன் சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் ரஞ்சித் டீ சில்வா பிரதம அதிதியாகவும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் யு.எல்.எம் ஹாஸிம் கௌரவ அதிதியாகவும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.மன்சூர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
63 வருட கால கல்லூரி சரித்தரத்தில் முதற்தடவையாக சர்வதேச ரீதியில் வெளிநாடு ஒன்றுக்கு பாடசாலை மாணவர் குழுவொன்று விஜயம் செய்தது இதுவே முதற்தடவையாகும்.
பல தடைகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தின் பிரபல பாடசாலையிலிருந்து பட்மிண்டன் (badminton ) பயிற்ச்சிக்கும்,போட்டிகளுக்குமாக முதன் முறையாக அழைத்து செல்வதற்கு உறுதுணையாக இருந்த இலங்கை பட்மிண்டன் சங்கதிக்கும் அதன் பின்புலமாக செயல்பட்ட கிழக்கிலங்கை பட்மிண்டன் சங்கத்தினருக்கும் வாழ்த்துக்கள்.இந்த நிகழ்வின் பிரதம அதிதி prof.Ranjith De Silva சர்வதேச பட்மிண்டன் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.
ReplyDelete