பௌத்த தர்மம் எங்கே செல்லுகின்றது..?
(எம்.எஸ்.சஹாப்தீன்)
முஸ்லிம்களுக்கு எதிரான தனது எதிர் நடவடிக்கைகளை துண்டுப் பிரசுரங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றினால் மேற்கொள்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தனை சகித்துக் கொள்ளாத பௌத்த கடும்போக்கு இனவாதிகள் தீக்குளிப்பு மூலமாக அதனை சாதித்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதனையே இந்திரத்ன தேரரின் தீக்குளிப்புச் சம்பவம் அமைந்துள்ளது. இந்தப் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்க வேண்டியள்ளது. தங்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு இனவாதிகள் இதற்கு முதல் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளின் போது பொறுடையுடன் இருந்ததனைப் போன்று தொடர்ந்தும் பொறுமையுடன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.
பௌத்த கடும்போக்கு இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை பௌத்த சிங்கள மக்களிடையே பரப்பி சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தக் கொண்டு வருகின்றார்கள். சிறுபான்மையினரை பெரும்பான்மையினருடன் வலிந்து சண்டையிடச் செய்து. சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கம், நாட்டிற்கும் எதிரானவர்கள் என்ற விசத்தை சிங்கள மகக்ளிடையே எற்படுத்தி, ஒரு குழப்ப நிலையை நாட்டில் ஏற்படுத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாகும். இந்த திட்டத்தை முஸ்லிம்களிடம் முதலில் ஆமுல்படுத்திவிட்டு, பின்னர் ஏனைய இனஙட்களுக்கு எதிராகவும் மேற்கொள்வதற்கு திட்டங்களை வகுத்துள்ளார்கள் என்பது அவர்களின் கருத்தக்களின் மூலமாக அறிந்து கொள்ள்க் கூடியதாக இருக்கின்றன.
முஸ்லிம்கள் மேற்கொண்ட உயர்ந்தபட்ச பொறுமை காரணமாக பௌத்த கடும்போக்கு இனவாதிகளின் எண்ணங்கள் நிறைவேறவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இவர்களின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டது. அரசியலுக்காக ஒரு இனத்தை நசுக்கி, அதன் மூலமாக பெரும்பான்மையினரின் ஆதரவபபெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்படுகின்ற மயற்சிகளை அரசாங்கம் முளையில் கிள்ளி எறிந்திருந்தால் இன்றைய உயிர்ப்பலி நிலைக்கு நாடு வந்திருக்கமாட்டாது.
மாடுகளை அறுக்கக் கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டுமென்றே இந்திரத்ன தேரர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். பௌத்த மதத்தைப் பாதுகாத்தல் என்ற பெயரில் புத்தரின் கோட்பாடுகளுக்கு மாற்றமாக சில பௌத்த பிக்குகள் செயற்பட்டுக் கொண்டிருப்பது நாட்டிற்கு பெரும் இழுக்கையும், பௌத்த மதத் தலைவர்களுக்கு தலைக்குனிவையையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இந்திரத்ன தேரரின் செயலால் பௌத்த மதத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக சில பௌத்தர்களே கருத்துக்களை வெளியிட்டக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பௌத்த கோட்பாட்டிற்கு எந்த இழுக்கும் எற்படவில்லை. தமது குறுகிய சிந்தனைகளை அடைந்து கொள்வதற்கு பௌத்த தர்மத்தை கைகளில் எடுத்துக் கொண்டவர்களுக்கும், இவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முதல் காவல்துறையினர் வரை நடவடிக்கைகளை எடுக்காது இருந்தவர்களுக்குமெ இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் இறைச்சிக்காக மாடு மட்டும் அறுக்கப்படவில்லை. பன்றி, கோழி போன்றனவும் அறுக்கப்படுகின்றன. ஆனால், மாடு அறுப்பதனை மட்டும் தடை செய்ய வேண்டுமென்று பாரிய அழுத்தங்களை மேற்கொள்வது தனியே முஸ்லிம்களை நெருக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் பாரபட்சமான செயற்பாடாகும்.
இந்திரத்ன தேரரின் தீக்குளிப்பை பௌத்தர்களே வெறுக்கின்றார்கள். இளம் சந்ததியினருக்கு பிழையான வழிகாட்டுதலை காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஸ்தாபகத் தலைவரும்; தொல்பொருளியலாளருமான மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
முழு உலகிற்கும் அன்பினை போதிக்கும் புத்தபிரானை நினைவுறுத்தும் புனிதநாளான வெசாக் தினத்தில் தேரரொருவர் புனித தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து நாட்டுக்கும், பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கையே தேடித்தந்துள்ளார் .முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு இளம் பௌத்த பிக்குகளிடம் மிகவும் தாழ்வாகக் கேட்டுக்கொள்கிறேன்.சிலர் இதனை உயிர்த்தியாகம் எனக் கருதுகிறார்கள். அந்தத் துறவி யாருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தார்? மாட்டுக்காகவா? மற்றையது தனது உயிரை அழித்துக்கொள்ளும்போது ஒருவருக்கு அவர்மீது வெறுப்பும், குரோதமும் ஏற்படுகிறது. மிருகங்களைப் பற்றி அனுதாபம் ஏற்படுவதில்லை. தன்னுயிரை அழித்து மாடுகளைக் கொல்வதையோ, ஏனைய விலங்குகளைக் கொல்வதையோ நிறுத்த முடியாது. அதுபோல அதனை சட்டத்தினாலும் இல்லாமற் செய்யவும் முடியாது. இது தொடர்பாக மக்களுக்கு அதுபற்றிய தெளிவுறுத்தலை ஏற்படுத்த வேண்டும். எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீக்குளித்த தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மிகவும் தீவிரமாக செயற்பட்டவதென்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தேரர் உண்மையில் தீக்குளித்தாரா என்ற சந்தேகங்களும் முன் வைக்கப்படுகின்றன. ஏனெனில், தனியார் தொலைகாட்சி ஒன்றின் செய்தியில் பெற்றோல் ஊற்றிய நிலையில் நின்று கொண்டிருக்கும் தேரர் மீது வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த ஒருவர் நெருப்பை பற்றவைப்பதனை காணக் கூடியதாக இருக்கின்றது. ஆதலால், இது திட்டமிடப்பட்ட கொலையா என்று ஆராய வேண்டியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றன. அதே வேளை, தேரரின் உயிர் இழப்பை ஒரு தியாகம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பொலிஸாரின் விசாரணைகளை திசை திருப்புவதற்கும் முயற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆதலால், பக்கச்சார்பற்ற வகையில் விசாரணை நடைபெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தீக்குளிப்பு சம்பவம் இதுவே முதற் தடவையாகும். இந்தியாவில் அரசியலுக்காக, தலைவர்களுக்hக தீக்குளிக்கும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆந்த வழிகாட்டுதல் இலங்கைக்குள்ளும் வந்துவிடக் கூடாது.
இதே வேளை மாடு அறுப்பதனை தடுத்தாக வேண்டுமென்பதில் சிங்கள ராவய தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது.இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும.;பசுவதையை தடைசெய்யும் விதத்தில் இறைச்சி வெட்டுவது தொடர்பான சட்டங்களை திருத்த வேண்டும். ஆனால்,அலரி மாளிகையிலிருந்து பதில் கிடைக்கவில்லை. இன்னும் பிக்குகள் தீக்குளிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்களா? ஆனால் இனி நாங்கள் செத்தால் இன்னும் பலரையும் சேர்த்துக்கொண்டுதான் மரணிப்போம். மாட்டிறைச்சி விற்கும் கடைகளை இவர்களால் நிறுத்த முடியாவிட்டால் அந்த வேலையை நாங்கள் செய்கிறோம். ஆனால் எங்களுக்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது என்றும் சிங்கள ராவய பிக்கு ஒருவர் அவ்வமைப்பினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து எச்சரிக்கை செய்தார்.
இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிராகச் செயற்படவில்லை. நாட்டின் சட்டத்திற்கும், நீதிக்கும் சவால்விடும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை ஆட்சியாளர்கள் பரிந்து கொள்ளல் வேண்டும். இன்றைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்பதில் மேற்கத்தைய நாடுகள் பெரும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருப்பதோடு, அதிகளவான பணத்தையும் செலவீடு செய்து கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தக்களை கொண்டிருப்பவர்களின் மூலமாக நாட்டைக் குழப்பி ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, தீக்குளித்தது தற்கொலை செய்துகொண்ட போவத்தே இந்திர ரத்ன தேரர் அவரின் மரணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்திர ரத்ன தேரர் முன்னர் பிரதேச சபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் . இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குறித்தஇணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அது வெளியிட்டுள்ள தகவலில் தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர்என்றும் பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டினார் என்றும் கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல், அதே ஊரில் இவ்வருடம் பள்ளிவாசல் மீது தாக்குதல் ஆகியவற்றை குறித்த தேரர் நடாத்தியுள்ளார் என்றும் அந்தஇணையத்தளம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியைக் கொண்டவராகவே அவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பௌத்த தர்மம் பேதனைகள் மனித உணர்வுகளை மதிக்குமாறு போதிக்கின்றது. அதனை கடைப்பிடித்து சாதாரண மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்கள் பௌத்த பிக்குகளாவார்கள். ஆனால், ஒரு சில பௌத்த பிக்குகள் அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு பௌத்த தர்மத்திற்கு மாற்றமாக செயற்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படுமாக இருந்தால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதியை இழக்க வேண்டியேற்படும்.
பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் இன ஐக்கியம் பேணப்படல் வேண்டும். அதற்கு அமைவாகவே கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஆனால், இன்று ஒரு மதத்தை மட்டும் அடிப்டையாக வைத்து கொள்கை வகுக்கப்பட வேண்டுமென்று போராட்டங்களை நடத்துவது கண்டிக்கபட வேண்டியதாகும். பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காகவே போவத்தே இந்திர ரத்ன தேரர் தீக்குளித்து உயிர் நீத்தார் என்று அதனை நியாயப்படுத்தினால், தமிழ் ஈழத்திற்காக புலிகள் தற்கொலை செய்தனை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களின் வாதங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியேற்படும்.
இன்றைய ஜனாதிபதி எல்லா இனங்களையும் சரிசமமாக பார்ப்பேன் என்று உறுதி அளித்துள்ளார். நாட்டில் 30 வருடங்களாக வேறூன்றி இருந்த பயங்கரவாதத்தை அழித்த ஜனாதிபதிக்கு பௌத்த கடும்போக்கு இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதென்பது ஒரு கடினமான காரியமாக இருக்காது. ஆதலால், முஸ்லிம்கள் கடந்த ஆறு மாதங்களாக பொறுமை காத்ததைப் போன்று, தொடர்ந்து பொறுமையாக இருக்க வேண்டும். முஸ்லிம் தலைமைகள் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
ஆனால், முஸ்லிம் தலைமைகள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தாலும், அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுப்பதில்லை. அதிகாரிகளுடன் கதைப்பதற்கே தயக்கம் காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைமைகள் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நல்ல தலைவர்கள் இல்லாத சமூகம் தனது தலைவிதியை சிறப்பாக்கிக் கொள்வதற்கு புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும். இதனைச் செய்வதற்கு முஸ்லிம் சமூகம் தயராக வேண்டும். இதனைவிடுத்து அரசாங்கத்தை குறைகூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

சஹாப்தீன் மிக அழகான முறையில் தமது கருத்தை தெரிவித்துள்ளார் முஸ்லிம்கள் முன்பு காட்டிய பொறுமை போல தொடர்ந்தும் பொறுமையாக இருங்கள் இன்னல்லஹா மஹஸ்சாபிறீன்.அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
ReplyDeletesuperb abd timely article by my friend shahabdeen
ReplyDelete