அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி பயிலுனர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பம்
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பயிலுனர் ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று முதலாம் திகதி முதல் நடைபெற்று வருவதாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தெரிவித்தார்.
இவ்வாண்டிலும் 190 பயிலுனர் ஆசியர்களை தெரிவு செய்யும் நோக்கில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டில் விஞ்ஞானம், கணிதம், ஆரம்பக் கல்வி, இஸ்லாம், விசேட கல்வி, தமிழ், கணக்கியலும், வர்த்தகமும் என ஏழு பிரிவுகளைக் கொண்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
இதனடிப்படையில் விஞ்ஞான பிரிவில் 30 பயிலுனர்களும், கணிதத்திற்கு 30 பேரும், ஆரம்பக் கல்விக்கு 50 பேரும், இஸ்லாத்திற்கு 15 பேரும், விசேட கல்விக்கு 15 பேரும், தமிழ் பிரிவில் 30 பேரும், வர்த்தகம்,கணக்கியலுக்காக 20 பயிலுனர்களுமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மேற்படி பாடவிதானங்ளுக்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று திங்கட்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளன. தகுந்த காரணங்களுக்காக நேர்முகப்பரீட்சைக்கு சமூமளிக்காதவர்களுக்காக வேறொரு தினத்தில் நடத்தவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அதரிவு செய்யப்பட்ட பயிலுனர்களை கல்லூhயில் சேர்த்துக் கொள்வதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பீடாதிபதி நவாஸ் மேலும் தெரிவித்தார்.
Post a Comment