Header Ads



நிந்தவூர் விவசாயிகளுக்கு தலையிடி - நிவாரணம் பெற்றுக்கொடுப்பது யார்..?

(Umar Ali) நிந்தவூர் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் அமபாரை மாவட்டத்தின் கரையோர  பிரதேசமாகும்,சுமார் 7182 ஏக்கர் நெற்காணியை கொண்டுள்ள இவ்வூரில் மகா,யல (பெரும்போகம்,சிறுபோகம்) எனும் இரு போகங்களுக்கு நெல் செய்கை பண்ணப்படுகின்றது. 

 நிந்தவூர் கமநல சேவைப்பிரிவின் கீழ் 13 விவசாயக்கன்டங்கள் இருக்கின்றபோதிலும்    அல்லிமூலை,பரவன் நடு,பரவன்மேல்.நடுக்குடி நாடு,நடுக்குடி கிழல்,கயற்றையடி,செங்கட்படை,மேற்கு,செங்கட்படை தெற்கு,  போன்ற  கண்டங்களில் ஒருமுறையும் இல்லாதவாறு இம்முறை mites  நோய்த்தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

இல்லை மடலிலும் ,தண்டிலும் சாற்றை    உருஞ்சிக்குடிக்கும்   mites  தாக்கமானது  நெற்பயிரின் வளர்ச்சியை வெகுவாகப்பாதிக்கின்றது,இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளன தாவரம் வளர்ச்சி குன்றிக்கானப்படுவதுடன் சாறு  உருஞ்சப்படுவதனால் நிறம் வெளிறி மஞ்சள் நிறமாகின்றது.  குட்டையான தாவரங்களை  வளர்த்தெடுப்பதற்கு அதிகளவான பசலைப் பிரயோகம் ,கிருமிநாசினி பிரயோகம் என்பன தேவைப்படுகின்றது.

வழமையான செலவை விட  செலவு அதிகரிப்பது மட்டுமன்றி ,தாக்கத்திற்குட்பட்ட நெற்பயிரின் விளைச்சலும் கணிசமானளவு குறைவடையும் இநிலையில்  இம்முறை இடப்போகம் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள நிந்தவூர் பிரதேச  நெற்செய்கையாளர்களுக்கு  எதிர்பார்த்தளவு இலாபம் கிடைக்குமா என்ற கேள்வி நிலவுகின்றது.

அதிகளவு நெல் செய்கை பண்ணப்படும் இப்பிரதேசத்தில் குறித்த சில வருடங்களாக காணப்படும் இந்த நோயைக்கட்டுப்படுத்த விவசாயத் திணைக்களம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் இதுவரை ஆக்கபூர்வமான எதுவித  பலனும் கிடைக்கவில்லை ,

No comments

Powered by Blogger.