கணவரை கத்தியால் குத்திவிட்டு பொலிஸுக்கு அவசர தொலைபேசி அழைப்பெடுத்த பெண்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் கணவரை கத்தியால் குத்தி விட்டு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தன்னை தாக்குவதாக கூறிய பெண் மகதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவமொன்று இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சிவில் பாதுகாப்பு படை வீரரான டபிள்யூ.சம்பத் (24) தெவனிபியவர,மொறவௌ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
வயிற்றில் 08 மாதக் குழந்தையுடன் இருப்பதாகவும் தனது மனைவி காலையில் கத்தியால் தன்னை குத்தியதாகவும் அதனையடுத்து அவசர தொலைபேசி இலக்கமான 119 இலக்கத்துக்கு அறிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட கணவர் வைத்தியசாலை தரப்பினரிடம் தெரிவித்தார்.
மகதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கணவரை கத்தியால் குத்திய மனைவி தன் வயிற்றில் காலால் உதைத்ததாக கூறி அவரும் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment