ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொடுமை புரிந்த பிரிட்டன் இராணுவத்தினரை தண்டியுங்கள்
மற்றும் ஆப்கானில் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் பிரிட்டனை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்புக் காலக்கட்டத்தில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணைகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
இதுவரை யாரையும் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவோ, தண்டிக்கவோ செய்யவில்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஏஜன்சி சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவேண்டும், ஈராக்கிலும், ஆப்கானிலும் ராணுவ தலையீட்டின் போது சாதாரண மக்களை சித்திரவதைச் செய்தது கவலையை ஏற்படுத்துகிறது என்று ஐ.நா ஏஜன்சியின் 10 நிபுணர்கள் அடங்கிய குழு கூறியுள்ளது.
பிரிட்டீஷ் சட்டத்தின் சிக்கல் மிகுந்த சட்டங்களே, இத்தகைய விசாரணைகளை தாமதப்படுத்த காரணம் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரான அலஸியோ ப்ரூணி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய கொடுமைகள் குறித்து சர் பீட்டர் கிப்ஸனின் புலனாய்வு அறிக்கை ஓரளவு வெளியே வந்தது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.
Post a Comment