மன்னார் வலயக்கல்வி பொறுப்பாளர்களே..!
முசலிப் பிரதேசத்தில் தற்போது புதிதாகப் பாடசாலைக் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் பல பாடசாலைகளில் நடைபெற்று வருவதைக் காணலாம். அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அயராத முயற்சியின் காரணமாகக் கட்டிடத்திற்கான நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் தரமான கட்டிடங்கள் அமைக்கப்படுவதையும், அப்பாடசாலைகளில் நில வளத்திற்கேற்ப கட்டிடங்களை அமைக்கவும், தேவையற்ற நிலவள விரயத்ததைக் குறைக்கவும், அமைக்கப்படும கட்டிடங்களின் கவின் நிலை, போன்றவற்றையும் கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.
ஆனால் இவை கருத்தில் கொள்ளப் படுவதாகத் தெரியவில்லை. முசலியின் ஒரு பிரபல்யமான பாடசாலையில் மாடிக்கட்டிடம் ஒன்றின் கீழ்த்தளத்தை முற்றாக மறைக்கக் கூடியவகையில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடும், அரசியல் வாதிகளும், அமைச்சர்களும்,அதிகாரிகளும் இக்கட்டிடத்தை ஏன் இப்படிக்கட்டி மாடிக் கட்டிடத்தின் அழகை இல்லாது செய்துள்ளனர் என வினாத்தொடுக்கின்றனர்;. இக்கட்டிடம் கட்டப்படும் போது வலயக்கல்வி அலுவலக கட்டிடப் பகுதிக்குப் பொறுப்பான தொழிநுட்ப உத்தியோத்தர்கள். இதனைக்கருத்திற் கொள்ளவில்லையா? ஆலோசனை வழங்கப்படவில்லையா? என வினாத் தொடுக்கின்றனர்.
இன்று இருக்கின்ற நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பே அதனை முப்பரிமான அமைப்பில் கூட பார்வையிடக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே இப்படியான தவறுகள் நடைபெறாமல் இனிவரும் காலத்திலாவது , நடவடிக்கை எடுக்கப்படுமா?
வலயக்கல்வி அலுவலகத் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பொறியியலாளர்கள் போன்றோர் ஒன்றிணைந்து சிறப்பான பெருந்திட்டம் (அயளவநச pடயn) தயாரித்து பாடசாலை நிலவள முகாமையுடன், பாடசாலை கவின் நிலையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச புத்தி ஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Post a Comment