Header Ads



கசினோ, மதுபானக் கடைகள் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட வேண்டும் - உலமாசபை

நாட்டில் கணிசமாக அதிகரித்துவரும் கசினோ சூதாட்ட நிலையங்கள், மதுபானக் கடைகள், புக்கிகள் எதிர்கால சந்ததிகளின் ஒழுக்க விழுமியங்களை பாதிக்கும் என்பதால் இவை முற்றுமுழுதாக தடைசெய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

சகல சமயங்களிலும் தடுக்கப்பட்டுள்ள இப்பாவச் செயல்கள் சமய ஒழுக்கங்களை பாரிய அளவு பாதிப்பதால் இவை எக்காலத்திலும் அனுமதிக்கப்பட முடியாதவையாகும். சுபீட்சமான வாழ்க்கையை எதிர்தபார்க்கும் ஒவ்வொரு நாட்டுப் பிரஜையும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதிக்கும் இவ்வாறான செயல்களை எதிர்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

எனவே அனைத்து சமயங்களையும் மதித்து செயற்படும் இச்சுதந்திர இலங்கையில் இவ்வாறான பாவகாரியங்கள் தடுக்கப்படுவதன் மூலமே பண்பாடுள்ள ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொறுப்பானவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா



4 comments:

  1. ஜம்இய்யதுல் உலமா சபை இப்படியான ,மோசமான விடயங்களை சுட்டிகாட்டிக்கொன்டே இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. நமது முஸ்லிம் சமூகத்துக்கு நல்லவிடயங்களை சொல்லுங்கள் அவனுவ எக்கேடுகேட்டுப்போனாலும் நமக்கென்ன

    ReplyDelete
  3. இது நல்ல விடயம்,.தாமதமாகியாவது இப்படி ஒரு முடிவெடுத்தது சந்தோசமே...முஸ்லீம்கள் மாடு அறுப்பதினால் யாருக்கும் எந்த இனத்துக்கும் கெடுதி ஏதுமில்லை,ஆனால் முஸ்லீம்களை த்துன்புருத்த வேண்டும் என்ற நோக்கத்திலே தான் அவர்கள் மாடு அறுப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். உண்மையாகவே மக்களுக்கு கெடுதிவிழைவிப்பது தான் கசீனோ,மதுபாணம்,புக்கிகள்,ஏனையபோதை வஸ்த்துகள் எல்லாம் இது முலு உலகம் அறிந்த உண்மை எனவே நிறுத்தாமல் முஸ்லீம்களாகிய நாங்கள் ஏனைய மதத்தவர்களையும் சேர்த்துக்கொண்டு போறாட வேண்டும் நல்ல காரியத்துக்கு நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான்.

    ReplyDelete
  4. நல்ல முன்நெடுப்பு!

    ReplyDelete

Powered by Blogger.