Header Ads



'ஸ்மார்ட் போன்' இல்லாமல் போய்விடுமோ..?

"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், "ஸ்மார்ட் போன்' இல்லாமல் போய்விடுமோ' என, மனதளவில் பயப்படுவதாக, ஆஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, "சிஸ்கோ' என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம், ஆஸ்திரேலியாவில், 30 வயதுக்கு கீழ் உள்ள , 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், பெரும்பாலானவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து, "சிஸ்கோ' முதன் மை தொழில்நுட்ப அலுவலர், கெவின் பிளாக் கூறியதாவது,

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட பலர், ஒருவேளை அந்தபோன் தொலைந்து போய்விட்டால் தங்களால் எதுவுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். அவர்களது ஆழ்மனதிலும் இந்த எண்ணம் நன்கு வேரூன்றிவிட்டதை எங்களால் உணரமுடிந்தது. ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால், தங்களது வாழ்க்கையே பறிபோய்விட்டதாக பலர் கருதுகின்றனர். நவீன யுகத்தின் கதாநாயகனாக உள்ள மொபைல் போன், "நோமோபோபியா' என்ற உளவியல் ரீதியிலான குறைபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஐந்து பேரில், ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு கெவின் பிளாக் கூறினார்.

காலையில் படுக்கையில் இருந்து எழுவது முதல், இரவு படுக்கப்போகும்வரை, தொலைபேசியே கதி என, ஏராளமான இளைஞர்கள் மாறிப்போயிருந்ததை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தை சேர்ந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும், கைக்கேல் கார் க்ரெய்க் என்பவர் குறிப்பிடுகையில், ""ஸ்மார்ட் போன் மீதான இந்த மோகம் பலரை பன்படுத்தியிருந்தாலும் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம். 10 நிமிடத்திற்கு ஒரு முறை, இவர்கள், தங்களது மொபைல் போனில், இ-மெயில் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து சோதிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு, 96 முறை இப்படி சோதிக்கின்றனர்,'' என்றார்.

No comments

Powered by Blogger.