பொலிஸாரின் அறிவித்தலையடுத்து பம்பலப்பிட்டியில் இறைச்சி வகைகள் ஒளித்து வைப்பு
(Vi) மாடு வெட்டுவதை தடைசெய்யுமாறும் மதமாற்றச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி சிங்கள ராவய அமைப்பு கதிர்காமத்தில் ஆரம்பித்த பாதயாத்திரை நேற்று கொழும்பில் முடிவடைந்தது. கடந்த வாரம் கதிர்காமத்திலிருந்து சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு நோக்கிய பாதயாத்திரையினை ஆரம்பித்திருந்தனர்.
இவர்கள் நேற்று பாணந்துறையிலிருந்து கொழும்பு வரை யாத்திரையாக வந்து அலரிமாளிகை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கான மகஜரை சமர்ப்பித்துள்ளனர்.
பாணந்துரையிலிருந்து அலரிமாளிகை வரை காலிவீதியால் இவர்கள் பாதையாத்திரையாக வந்ததையடுத்து பம்பலப்பிட்டிப் பகுதியிலுள்ள முஸ்லிம் உணவகங்களுக்கு சென்ற பொலிஸார் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோழி இறை உட்பட இறைச்சி வகைகளை ஒளித்து வைக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் அறிவித்தலை அடுத்து பம்பலப்பிட்டி சந்திப்பகுதியில் அமைந்திருந்த உணவகங்களில் பொறித்த கோழி இறைச்சி உட்பட இறைச்சி வகைகள் ஒளித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதயாத்திரையில் ஈடுபட்டவர்களில் சிலர் பொல்லுகளுடனும் கலந்து கொண்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
nalla nerem olich wachch, illati aduthu thindiruppangal.
ReplyDeleteபோலிசுக்கு சில வேளையில் பயம் தொட்டிருக்கும்..வார கும்பல் இறைச்சி முழுவதையும் ஓசில சாப்பிடிடும் என்று,,,,,அது தான் ஒளிச்சு வைக்க சொல்லியிருப்பார்களோ????????
ReplyDeletepaathu kaappu kodukka wendiya police kaarargale oliththu waika sollum ore naadu ilangai thaan........
ReplyDelete