ஜனநாயக பண்புகளுக்கு சாவுமணியடித்த சட்டகல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகம்
(அல் அமீன்)
இலங்கை சட்ட கல்லூரி முஸ்லிம் மஜ்லிசின் வரலாறானது 1950 ம் ஆண்டு அதன் ஸ்தாபக தலைவர் சட்டத்தரணி எஸ் .எச் .மன்ஷூர் அவர்களின் காலம் தொட்டு இன்றுவரை நீடித்துள்ளது .இம் மஜ்லிஸ் ஆனது தனது ஆயுளில் இதுவரை கொண்டிராத அதீத அங்கத்தவர்களின் பிரசனத்தை இவ்வருடம் கொண்டுள்ளமை யாவரும் அறிந்த உண்மை. இம்முறை முதலாம் வருடத்திற்கு தெரிவான (109) முஸ்லிம் மாணவர்களுடன் சேர்த்து இரெண்டாம் வருடம் (50) மற்றும் மூன்றாம் வருடம் (21)என மொத்தமாக 180 மாணவர் தொகையினை கொண்ட ஓர் முஸ்லிம் சமுகத்தின் பிரசனத்தை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதல் கண் நன்றிகள் அல்ஹம்துலில்லாஹ்
சட்ட கல்லூரி முஸ்லிம் மஜ்லிசானது கடந்த காலங்களில் நிர்வாக உறுப்பினர்களை நியமிப்பதற்கு கூட மாணவர் தொகை இன்றி பரிதவித்த வரலாறு அண்மையக் காலங்களினால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. அதிகரித்த மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் நிர்வாக வினைத்திறனும் வியாபிக்கப்பட வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு. முஸ்லிம் மஜ்லிசின் வருடாந்த நிகழ்வான “மீசான்” சஞ்சிகை வெளியீட்டை தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவு இடம் பெறுவது மரபு, இதற்கமைய இவ்வருடமும் புதிய நிர்வாகத் தெரிவின் விண்ணபங்கள் கோரப்பட்ட விளம்பரம் காட்சிப்படுத்தப் பட்டதிருந்திருகின்றது.
அதன் தொடர்சியாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்கின்ற நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும் 20.06.2013 வியாழக்கிழமை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்திருந்தது . மாணவர்கள் தாம் போட்டி யிடுகின்ற பதவிகளுக்கான வேட்பு மனுக்களை நடப்பு நிர்வாகத்தின் செயலாளரிடம் 18.06.2013 ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முதல் சமர்பிக்குமாறு வேண்டப் பட்டிருந்தனர் . அதற்கேற்ப வேட்பு மனுக்களும் சமர்பிக்க பட்டதாம்
வருடாந்த பொதுக்கூட்டம்
கடந்த வியாழக்கிழமை பி.ப 2.00மணிக்கு குறித்த வருடாந்த பொது கூட்டம் முஸ்லிம் மஜ்லிசின் நலக்கப்பாளர் (Patorn) ஆகிய கல்லூரி முதல்வர் ,உதவி நலக்கப்பாளர் (Vice Patorn), பெரும் பொருளாளர் ஆகியோரின் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வின் முதல் அங்கமாக கடந்த வருட த்தின் அறிக்கைகள் சமர்பிக்கபட்டு அவை ஏற்று கொள்ள பட்டதை தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவு தொடர்பான சொல்லாடல் ஆரம்பமாகியுள்ளது, இதன் போது உரையாற்றிய உதவி நலக்காபாளர் முஸ்லிம் மஜ்லிசின் நிர்வாக தெரிவுக்கு தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு இது உகந்த நேரம் அல்ல என தெரிவித்ததோடு இரு குழுக்கள் போட்டி யிடுகின்றனர் அதில் ஒரு குழுவினர் சட்ட கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் தொடர்பான ஒன்று கூடல் ஒன்றினை கல்லூரிக்கு வெளியில் மேற்கொண்டதாக தான் அறிந்ததாகவும், இது போன்ற செயற்பாடுகள் கண்டிக்கதக்கவை என்பதோடு எதிகாலத்தில் இத்தகைய செயற்படுகளுக்க இடமளிக்கக வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்
அதன் பின் நிகழ்வை வழிநடாத்திய மஜ்லிசின் பெரும் பொருளாளர் அபேட்சகர் பட்டியல் இரெண்டில் குறிப்பிட பட்டுள்ள நபர்கள் அனைவரும் உதவி நலக்கப்பாளர் பிரஸ்தாபித்த நிகழ்வில் சட்ட கல்லூரி வளாகத்திற்கு வெளியில் பங்கு பற்றியதால் அவர்களின் வேட்பு மனுக்கள் இரத்து செய்வதாக கூறி புதிய நிர்வாக உறுப்பினர்கள் “மஷுறா” அடிப்படையி ல் தெரிவு செய்யப்பட உள்ளார்கள் எனும் செய்தியினை நலக்கபாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்
அதனை தொடர்ந்து தலைவர் செயலாளர் உட்பட நிர்வாக பதவிக்கான அபேட்சகர் பட்டியல் இலக்கம் ஒன்றில் குறிப்பிட பட்டிருந்த நபர்களின் பெயர்கள் வசிக்க பட தொடங்கியதாம்.
குறித்த நிகழ்ச்சிநிரலைசற்றும் எதிர்பார்த்திராத மாணவர்சமுகம் மஷுறாவின் பெயரால் அரங்கேற்றப்பட்ட குறித்த விடயத்தை மாணவர்கள் எதிர்த்ததுடன் அது தொடர்பாக கேள்விகளை கேட்கவும் தயங்கவில்லையாம்.
சட்ட கல்லூரிக்கு வெளியல் மஜ்லிஸ் தொடர்பான கூட்டம் நடத்துவது வேட்பு மனு நிராகரிப்பிற்கு இட்டு செல்லும் என யாப்பில் குறிப்பிட வில்லை அத்துடன் வேட்புமனு நிராகரிப்பை தேர்தல் நிமிடத்தில் அறிவிக்கின்றமை வேடிக்கயாக உள்ளது என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன் மஷுராவின் பெயரால் ஓர் உள்ளக நிகச்சிநிரல் அரங்கேறுவதாக சந்தேகம்கொண்டுள்ளனர் அத்துடன் யாப்பின் அடிப்படையல் சனநாயக முறையல் இரகசிய வாக்கெடுப்பிற்கு விடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதன் பொது நிகழ்வினை முகம் கொள்ள பெரும் பொருளாளர் மஜ்லிஷில் அங்கதுவமாக இருக்க்க விரும்புவர்கள் இருக்கலாம் முடியாதவர்கள் வெளியே றி செல்லுமாறு உரத்த தொனியல் தெரிவித்துள்ளார் ,இதன் போது வெளியேற தீர்மானித மாணவர்கள கல்லுரி முதல்வர் முன் வரிசை ஆசனத்தில் அமர்திருந்த காரணத்தினால் மாத்திரம் பொறுமை காத்தனராம் அது மாத்திரமன்றி யாரெல்லாம் சனநாயக வழிமுறையை நோக்கி குரல் கொடுத்தார்களோ அவ அணைத்து மாணவர்களின் பெயர்களையும் அதிகார தொனியல் கேட்டு எளுதிக்கொண்டனராம் சனநாயக முறைக்கும் மஜ்லிசின் யாப்பிற்கும் முரணான கருத்து கணிப்பு எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் கருத்து திணிப்பாக மாணவர்கள் பாற்கின்றனர்.அதனை தொடர்த்து அதிகாரதொனியில் தனிச்சையாக நிர்வாக உறுப்பினர்கள் பெயர்கள் வாசிக்கப்பட்டு முடிந்ததாம்
உலமாக்களின் வேட்பு மனுவினை உதறித்தள்ளிய நிர்வாகம்
180 முஸ்லிம் மாணவர் தொகையினை கொண்ட சட்டக்கல்லுரி மாணவர் கட்டமைப்பில் 07 உலமாக்கள் காணப்படுகின்றனர். இவர்களில் பலர் நிர்வாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தும் ஒருவர் கூட உள்ளீர்க்கப்பட வில்லை, அல்-குரான் சுன்னாவை அடிப்படையாக கொண்ட மஜ்லிஸ் யாப்புக்கு நடந்த ஆப்பாக பார்க்கின்றனர் இவ் உலமாக்கள்
முதலாம் வருட மாணவர்களின் துணிச்சல்
மஜ்லிஷின் மரபிற்கு ஏற்ப முதலாம் வருட மாணவர்கள் மஜ்லிஷின் நிறைவேற்று குழு உறுப்பிணர் பதவிக்கு மாத்திரம் போட்டியிட முடியும் இதற்கினங்க இம்முறை 48 மாணவ மாணவிகள் )03 உலாமாக்கள் உட்பட) விண்ணப்பித்திருந்தனர். மஜ்லிஸ் நிர்வாக தெரிவு முறை கொண்டிருந்த அசாதாரண முறைமையை கண்டித்து இவர்களில் 42 மாணவ மாணவிகள் தமது விண்ணப்பதை பகிரங்கமாக எழுந்து ஒருவர் பின் ஒருவராக பின் வாங்கி கொண்டதுடன் தமது எதிர்பையும்வெளிக்காட்டிஉள்ளனர்
பிரதித் தலைவரின் மினஅஞ்சல்
நடப்பு நிர்வாக நியமனத்தில் பிரதி தலைவராக நியமிக்கப்பட்ட ஓர் உருப்பினர் குறித்த நியமன முறை சீர் செய்யப்பட்டு நிர்வாக செப்பனிடல் இடம்பெற தவறுமிடத்து குறித்த பதவியை தான் இராஜினாமா செய்ய உள்ளதாக பெரும் பொருளாளர் மற்றும் உதவி நலக்கப்பாளர் ஆகியோருக்கு மினஅஞ்சல் அனுப்பி உள்ளதாக உறுதிப்படுத்தபட்ட தகவலும் கிட்டியுள்ளது
சனநாயக உரிமைக்கு மதிப்பளித்த தமிழ் மாணவர் சட்ட மன்றம்
சட்ட மாணவர் தமிழ் மன்ற நிர்வாக தெரிவானது இதே மஜ்லிசின் கூட்டம் நிகழ்த்த தினத்தில் இதே வளாகத்தில் காலை 11.30 தொடக்கம் 1.30 வரை இடம்பெற்றுள்ளது. இரு குழுவினர் வேட்பு மனு தாக்கல் செய்ததும் தமிழ் மன்ற யாப்புக்கு அமைவாக தேர்தலை நடாத்த வழிசமைத்தார் அதன் பெரும் பொருளாளர்(இவர் ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது). இதன்படி மாணவர்கள் தாம் வாக்களித்து தமது ஜனநாயக உரிமையை புசித்து முஸ்லிம் ஒருவரை வெற்றி பெற செய் துள்ளனராம் . இதே எதிர் பார்ப்புடன் இதே தினம் 2.00 மணிக்கு மஜ்லிஸ் நிர்வாக தெரிவிற்கு சென்ற மாணவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு இவ்வாறான ஒரு சோக வரலாறு இடம்பிடிக்கும் அதுவும்சட்டக்கலுரிக்குள் இடம்பெறும் என சிறிதளவும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
உதவி நலக் காப்பாளரின் வேண்டுகோள்
நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய உதவி நலக் காப்பாளர் சட்ட கல்லூரி வரலாற்றில் குறித்த தினம் ஒரு சந்தோசம் அற்ற தினம் என குறிப்பிட்டதோடு இரு குழுவினரும் இணைந்து ஒருமித்த நிர்வாகத்தை நிறுவ தவறுமிடத்து குறித்த பதவியில் இருந்து தான் விலகி கொள்வதாக பகிரங்கமாக குறிப்பிட்டு விடை பெற்றுள்ளார்
முஸ்லிம் மாணவர்கள் சுயாதீனமாக இயங்க தீர்மானம்
மேற்படி நிர்வாகம் அனைவரினதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது சிலரால் பலாத்காரமாக நியமிக்கப்பட்டமை , மஜ்லிஸ் யாப்பு முற்று முழுதாக மீறப்பட்டமை, மாணவர்கள் கருத்து கூற இடமளியாது கருத்து சுதந்திரம் குரல்வளையில் நசுக்கப்பட்டமை, மாணவர்களை அச்சு றுத்துகின்ற தொனியல் நடந்தமை ,மாணவர்களை பலவந்தமாக மஜ்லிசை விட்டு வெளியேறுமாறு கூறியமை போன்ற காரணங்களை முன்வைத்து சுமார் 150க்கு மேற்பட்ட மாணவர்கள் சிந்தனா ரதியாகவோ செயல் ரதியாகவோ நடப்பு நிர்வாகத்தில் சங்கமிக்காது சட்ட கல்லூரி முஸ்லிம் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சுயாதீனமாக இயங்க ஏக மனதாக தீர்மானித்துள்ளனர்
முஸ்லீம் சமூகத்தின் கல்விசார் சொத்துக்களில் ஒன்றாக நோக்க படுகின்ற சட்ட கல்லூரி மாணவர் சமுகம், பிரதேச ,மொழி அந்தஸ்து ,போன்ற சிந்தனைகளுக்கு அப்பால் தனிமனித நிகழ்ச்சி நிரல்களை புறந்தள்ளி,மாற்று மத சகோதரர்கள் மத்தியல் இஸ்லாமிய முன்மதிரிகளுடன் இறைய ச் சத்தை முன்னிறுத்தி முஸ்லீம் மாணவர்களின் நல்வாழ்வுக்க செயலாற்ற இறைவன் துணை புரிவானாக
Post a Comment