பாராளுமன்றத்தில் குழப்பம் - சபை நடவடிக்கைகள் நாளைவரை ஒத்திவைப்பு
பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு மாறாக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றை நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடி மாலை 6 மணிக்கு நிறைவடையவிருந்த பாராளுமன்ற அமர்வு சற்று முன் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படாத பிரேரணை ஒன்றை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும கொண்டுவர முயற்சித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதன்போது இருதரப்பு உறுப்பினர்களுடனும் சபாநாயகர் கலந்துரையாடி பாராளுமன்றை நாளை வரை ஒத்திவைத்தார். adt
Post a Comment