அமெரிக்காவின் நவீன பாசிச வடிவம்
(ஜோண் பில்கர்)
1928 ல் பிரசுரிக்கப்பட்ட பிரச்சாரம் எனும் தனது நூலில் எட்வர்ட் பேர்ணயிஸ் எழுதியுள்ளது “மக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட பழக்கம் மற்றும் கருத்துக்களை உணர்வு மற்றும் அறிவார்ந்த வகையில் கையாளுதல் ஜனநாயக சமூகத்தின் ஒரு இன்றிமையாத அங்கமாகும். சமூகத்தின் இந்த கண்ணுக்குப் புலப்படாத நுட்பத்தை கையாளுபவர்கள் மறைமுகமான ஒரு அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், அதுதான் எமது நாட்டின் உண்மையான ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடத்துகிறது”. அமெரிக்கரான சிக்மண்ட் புரூடின் மருமகனான பேர்ணயிஸ் ‘பொதுசனத் தொடர்பு’ எனும் நாசூக்கான பதத்தை அரச பிரச்சாரமாக கண்டுபிடித்தார். இந்த கட்புலனுக்கு அகப்படாத அதரிசன அரசாங்கத்துக்கு இருக்கும் நீடித்த அச்சுறுத்தல்தான் உண்மை விளம்பியும் மற்றும் முதிர்ச்சியடைந்தவராகவும் உள்ள பொதுமக்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார்.
1971ல் மக்களுக்கு அரச இரகசியங்களை வெளிப்படுத்திய டானியல் எல்ஸ்பேர்க் பென்டகன் காகிதங்கள் என்றறியப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய கோப்புகளை கசியவிட்டு வியட்னாம் மீதான படையெடுப்பு ஒரு திட்டமிட்ட பொய்யை அடிப்படையாகக் கொண்டது என்பதை வெளிப்படுத்தினார். அதற்கு நான்கு வருடங்களுக்குப்பிறகு பிராங் சேர்ச் அமெரிக்க ஜனநாயகத்தின் கடைசித் தீப்பொறிகளில் ஒன்றான அமெரிக்க செனட்டின் பரபரப்பான விசாரணையை அம்பலமாக்கினார். இவை யாவும் அதரிசன அரசாங்கத்தின் முழு அளவையும் அம்பலப் படுத்துகின்றன, கொன்சவேர்ட்டிவ் மற்றும் லிபரல் ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்நாட்டு உளவு பார்த்தல் மற்றும் உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்பு முகவர்களின் நாச வேலைகள் மற்றும் போர்வெறி என்பனவற்றை ஊக்குவிப்பதுடன் மற்றும் ஊடகங்கள்,பெரிய நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து அவர்களின் பின்துணைகளையும் பெற்றுக் கொள்கின்றன.
தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தை (என்.எஸ்.ஏ) பற்றி செனட்டர் சேர்ச் “ அதன் கொள்திறன் அமெரிக்காவில் ஒரு கொடுங்கோலாட்சியை உருவாக்ககூடியது என்பது எனக்குத் தெரியும், மற்றும் இந்த நிறுவனமும் மற்றும் எல்லா நிறுவனங்களும் கொண்டுள்ள இந்த தொழில்நுட்பங்களை சட்டப்பிரகாரம்தான் இயக்குகின்றனவா என்பதை நாங்கள் கட்டாயம் காணவேண்டும்…. எனவே நாங்கள் அந்தப் பள்ளத்தை ஒருபோதும் தாண்டக்கூடாது. அந்தப் பள்ளம் என்பது அதிலிருந்து மீண்டும் திரும்பமுடியாத ஓரிடமாகும்” என்று சொன்னார்.
11 ஜூன் 2013ல் என்.எஸ்.ஏ ஒப்பந்தகாரர் எட்வேர்ட் ஸ்நோடன் த கார்டியன் பத்திரிகையில் பரகசியப்படுத்தியிருப்பதை தொடர்ந்து, டானியல் எல்ஸ்பேர்க் அமெரிக்கா இப்போது அந்தப் பள்ளத்தில் விழுந்துவிட்டது என்று எழுதினார். ஸ்நோடனின் வெளிப்படுத்தல்கள் சொல்வது முகப் புத்தகம்,கூகுள்,ஆப்பிள் போன்றவற்றைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட அனைவரையும் வாஷிங்டன் உளவு பார்த்துவருகிறது, அதன் மேலதிக சான்று பாசிசத்தின் நவீன வடிவம் - அதுதான் அந்த பள்ளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா முதல் ஆபிரிக்காவரை மற்றும் இந்தோனஷியா முதலான நாடுகளில் பழைய பாணியிலான பாசிஸ்ட்டுகளை உலகம் முழுவதும் பேணிப்பாதுகாத்ததால் அந்தப் பேயுரு உள்வீட்டிலேயே எழுந்துள்ளது. இதைப் புரிந்து கொள்வது குற்றவியல் தொழில்நுட்பத்தின் துஸ்பிரயோகங்களை புரிந்து கொள்வதற்கு நிகரானதாகும்.
1960 மற்றும் 70களில் அமெரிக்க வான்படையினரால் அழிவுக்கு உட்படுத்தப்படும் மென்மையான லாவோஸ் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்திய பிரெட் பிரான்ப்ஃமான், அரசியலமைப்பு சட்டத்தில் பேராசிரியரான ஒரு தாராண்மைவாதியான ஆபிரிக்கன் - அமெரிக்க ஜனாதிபதி எப்படி அந்தவகையான சட்டபூர்வமற்ற கட்டளைகளை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்க முடியும் என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு ஒரு பதிலை தருகிறது. அவர் எழுதியிருப்பது திரு ஒபாமாவின்கீழ் அல்லாது வேறு எந்த ஜனாதிபதியும் காவல்துறை அரசுக்கான எதிர்கால சாத்தியங்களுக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக அதிகமாக எதையும் செலவு செய்யவில்லை. ஏன்? ஏனெனில் ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷினைப் போலவே ஒபாமாவும் தனது பாத்திரம், தனக்காக வாக்களித்தவர்களுக்காக அல்லாது உலக வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த 1962 முதல் 20 மில்லியன்களுக்கும் மேற்பட்ட மனிதர்களை பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களை கொலை செய்து,காயப்படுத்தி, அல்லது வீடற்றவர்களாக்கிய நிறுவனத்தை விரிவு படுத்துவதற்காக என்பதை நன்கு புரிந்து கொண்டிருந்தார்.
இந்த புதிய அமெரிக்க இணைய - அதிகாரத்தில் சுழலும் கதவுகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. கூகுள் திட்டத்தின் பணிப்பாளரான ஜெயார்ட் கோகன், சதாம் ஹ_சைன் அணு ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை தாக்கிவிடக்கூடும் எனப் பொய்யுரைத்த புஷ் நிருவாகத்தில் முன்னாள் இராஜாங்க செயலாளராக இருந்த கொண்டலிசா றைசின் ஆலோசகராகக் கடமையாற்றியவர். ஈராக் நாட்டின் சிதைவுகளில் வைத்து சந்தித்துக் கொண்ட,கோகன் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவரான எரிக் ஸ்மிடிட், ஆகியோர் இணைந்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.’புதிய டிஜிட்டல் யுகம்’ எனும் அந்த நூலில் தொலைநோக்காளர்கள் என ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது முன்னாள் சி.ஐ.ஏ யின் பணிப்பாளர் மைக்கல் ஹேடன்,மற்றும் யுத்தக் குற்றவாளிகளான ஹென்றி கீசிங்கர்,மற்றும் டொனி பிளேயர் ஆகியோருக்கே. அந்த எழுத்தாளர்கள் கூகுளை பயன்படுத்தும் எங்களைப்போன்ற அனைவரையும் கண்காணிக்க என்.எஸ்.ஏக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை பரகசியமாக்கிய எட்வேட் ஸ்நோவ்டன் குறிப்பிட்டுள்ள முப்பட்டை வேவுபார்க்கும் திட்டம் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.
கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் என்கிற இரண்டு சொற்கள்தான் இந்த விடயத்தின் கருத்தை உருவாக்குகின்றன. அரசியல்,பொருளாதாரம்,மற்றும் இராணுவ வடிவமைப்பு என்பனவற்றால் பயிற்றப்படும் இவற்றில் பிரமாண்டமான கண்காணிப்பு மிகவும் முக்கிய பகுதியாக உள்ளன, ஆனால் பொதுமக்களின் உணர்வு நிலை பற்றியும் மறைமுகமாக பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.இது எட்வர்ட் பேர்ணயிஸின் கருத்து. அவரது வெற்றிகரமான இரண்டு முக்கிய பொதுசனத் தொடர்பு பிரச்சாரங்கள்,1917ல் போருக்கு கட்டாயம் போகவேண்டும் என்று அமெரிக்கர்களை சம்மதிக்கவைத்தது மற்றும் சிகரட் சுதந்திரத்தின் வெளிச்சம் அது பெண் விடுதலையை துரிதப்படுத்தும் என்றுகூறி பெண்களை பகிரங்கமாக புகைபிடிக்க இணங்க வைத்தது என்பனவாகும்.
பிரபலமான கலாச்சாரமாக இருப்பது, நெறிமுறையில் உயர்ந்ததாகவும் சுதந்திர உலகத்துக்கே தலைவனாகவும் இருக்கவேண்டும் என்கிற அமெரிக்காவின் மோசடியான இலட்சியம் மிகவும் சக்தியானதாக உள்ளது. இருந்தும் ஹொலிவூட்டின் குறுகிய போலிப்பற்றான காலங்களில்கூட அங்கு விதிவிலக்கான படங்கள் வெளியாகின, ஸ்ரான்லி குப்ரிக்கை நாடுகடத்து, மற்றும் அமெரிக்க விநியோகஸ்தர்களால் வெளியிடப்பட்ட சில சாகச ஐரோப்பிய படங்கள் இதற்கு உதாரணம். இந்த நாட்களில் குப்ரிக்கோ அல்லது வித்தியாசமான காதல் படங்களோ வெளியாவது கிடையாது மற்றும் அமெரிக்கச் சந்தை பெரும்பாலும் வெளிநாட்டுப் படங்களுக்கு மூடப்பட்ட நிலையில் உள்ளது.
நான் எனது சொந்தப்படமான ஜனநாயகத்தின் மீதான போர் என்பதை தாராள மனப்போக்கு கொண்ட ஒரு அமெரிக்க விநியோகஸ்தருக்கு காண்பித்தபோது, படம் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக செய்வதற்குத் தேவையான மாற்றங்களைக் குறித்து மிகப்பெரிய பட்டியல் ஒன்று என்னிடம் கையளிக்கப்பட்டது. எனது மனக்குறையை தணிக்க அவர் தந்த மறக்கமுடியாத மருந்து, ”நல்லது, சீன் பென்னை ஒரு வர்ணனையாளர் என்பதிலிருந்து தவிர்த்து விடலாம். அதனால் உங்களுக்கு திருப்தி ஏற்படுமா?” என்பதுதான். பின் நாட்களில் கத்தரின் பிக்லோவின் சித்திரவதைக்கு மன்னிப்புகோரும் ‘சீரோ டார்க் தேட்டி’ மற்றும் அலெக்ஸ் கிப்னியின் ஜூலியன் அசாஞ்சே பற்றிய சினிமாத்தனமான வேலையாக‘ நாங்கள் இரகசியத்தை திருடுகிறோம்’ போன்ற படங்கள் யூனிவர்சல் படப்பிடிப்பு நிலையத்தின் தாராளதன்மையின் பின்துணையுடன் வெளியாகின, சமீப காலம்வரை இதன் தாய் நிறுவனமாக இருப்பது ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ என்கிற நிறுவனமாகும். ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ ஆயுதங்கள், போர் விமானங்களுக்கான பாகங்கள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பம் என்பனவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். அந்த நிறுவனம் விடுவிக்கப்பட்ட ஈராக் நாட்டில் சில இலாபகரமான முயற்சிகளிலும்கூட ஆர்வம் கொண்டுள்ளது.
பிராட்லி மானிங்,ஜூலியன் அசாஞ்சே,மற்றும் எட்வேர்ட் ஸ்நோவ்டன் போன்ற உண்மை விளம்பிகளின் சக்தி,கவனமாக கட்டியெழுப்பப் பட்டுள்ள பெருநிறுவன சினிமா,பெருநிறுவன அகாடமி,மற்றும் பெருநிறுவன பிரசுரங்கள் போன்றவற்றின் முழுப் புனை கதைகளையும் மாற்றியமைத்துள்ளன. விசேடமாக விக்கிலீக்ஸ் ஆபத்தானது,ஏனெனில் அது உண்மையை வெளிக் கொணருவதற்காக உண்மை விளம்பிகளை வழங்கியுள்ளது.பிராட்லி மானிங் கசிய விட்டதாக கூறப்படும் ஒரு அமெரிக்க அப்பச்சி உலங்கு வானூர்தியின் விமானியறையில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒளி நாடா மூலமாக கூட்டு கொலைகளை வெளியுலகம் அணுக முடிந்தது. இந்த ஒரு காணொளியின் தாக்கம் காரணமாக மானிங் மற்றும் அசாஞ்சே ஆகியோர் அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு ஆளாக நேர்ந்தது. இதில் அமெரிக்க விமானப்படையினர் பாக்தாத் வீதிகளில் ஊடகவியலாளர்களை கொல்வதுடன், குழந்தைகளை காயப்படுத்துவதும் அதை அவர்கள் துல்லியமாக அனுபவித்து மகிழ்வதும் மற்றும் தங்கள் அட்டூழியத்தை அவர்கள் நல்லது என்று விளக்குவதும் இடம்பெற்றுள்ளது.இதுவரை ஒரு முக்கியமான உணர்வில் அவர்கள் அதிலிருந்து தப்பிக்க முடியாது, நாங்கள் இப்போது அதற்கு சாட்சியாக உள்ளோம், மற்றவை யாவும் அமெரிக்காவில்தான் தங்கியுள்ளது.
நன்றி: நியு ஸ்டேட்ஸ்மன்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Post a Comment