சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை அகற்ற துணைபோகமாட்டோம்
(Vi) 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டு வரவேண்டு என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த விடயம் அணுகப்படுவதை என்னால் உணர முடிந்தது. இது 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமன்றி எந்த வகையான குறைப்பையும் மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணை போகாது என்றும் அவர் சொன்னார்.
சிறுபான்மை மக்களின் குறைந்த பட்ச காப்பீடுகளையும் இல்லாமல் செய்வதற்கான இந்த நடவடிக்கையில் இறங்குவது என்பது இராஜதந்திர ரீதியில் ஏற்படும் நஷ்டம் மாத்திரமன்றி சிறுபான்மை சமூகத்தினருக்கும் சர்வதேசத்துக்கும் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை திட்டமிட்டு மீறும் செயலாகும் என்று தெரிவித்த அவர் 13ஆவது திருத்தத்தில் எந்தக் குறைப்பையும் செய்யமாட்டோம். 13ஆவது சட்டத்திலும் பார்க்க அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து சிந்திக்கின்றோம் என்றெல்லாம் பிரஸ்தாபித்துவிட்டு திடீரென இவ்வாறு சட்டமூலத்தைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல அதுவும் வடக்கில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதனைக் கொண்டு வர இருப்பது என்னைப் பொறுத்தவரையில் தார்மீகமான விடயமல்ல என்றும் அவர் சொன்னார்.
ப்பூ.. 18வது அரசியல் திருத்தத்திலும், 'திவி நெகும'விலும் சிறுபான்மை இனத்திற்கான காப்பீடுகள் பறிபோவதனைக் கண்டு கொள்ளாத இவர் இப்போதாவது இருக்கின்ற சிரட்டைத் தண்ணீர் அளவான உரிமைகள் பறிபோவதைக் கண்டு கொண்டுள்ளாரே..
ReplyDeleteகடைசி வரை இப்படியே உறுதியாக இருப்பாரா? அல்லது அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ள முடியாது என்று காரணம் கூறி கையை உசத்தி விடுவாரா..?
பொறுத்திருந்து பார்க்கலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Vaarauraikal, மிகவும் பொருத்தமான யதார்த்தமான பதிவு. நன்றி
ReplyDeleteமுந்திய கட்டங்களில் அவர் நினைத்தமாதிறியோ நம்பியமாதிறியோ கொடுக்கள் வாங்கல்கள் நடைபெறவில்லை போல் தெரிகிறது.
wait and see