தேசிய சூரா சபையில் இணையாதது ஏன்..? தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்
இலங்கை முழுவதுமுள்ள இஸ்லாமிய இயக்கங்களை ஒன்றினைத்து தேசிய சூரா சபை என்ற ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் சில இயக்கங்கள் ஒன்றினைக்கப்பட்டு உத்தேச சூரா சபை தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இச் சபையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தையும் உள்ளீர்ப்பதற்கான பல கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்த சபை உருவாக்குனர்களினால் முன்வைக்கப்பட்டது. அந்த அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் தேசிய சூரா சபையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இணையாது என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
தேசியசூராவின்அவசியம்உணரப்பட்டது ஏன்?
கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளிலிருந்து முஸ்லிம்களை காக்கவும், எதிர்காலத்தில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை தொடர்பாக குரலெழுப்பவுமே இச் சபை ஆரம்பிக்கப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களையும் இணைத்து, ஓர் இணக்கப்பாட்டிற்கு கொண்டு வந்து அனைவர்களின் பங்களிப்பும் இதில் உள்வாங்கப்படும் என்பதும் இவர்களின் அறிவித்தலாக உள்ளது.
தேசிய சூராவின் கொள்கை என்ன?
தேசிய சூரா என்பது குர்ஆனும், சுன்னாவும் காட்டிய அடிப்படையில் தான் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. தேசிய சூரா தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் அதன் பின்னனி அமைப்பாளர்கள் தேசிய சூராவின் அவசியத்தை உணர்த்துவதாக கூறி குர்ஆனின் வசனங்களையே மக்கள் மத்தியில் பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.
இதன் மேல்மட்ட கண்ணோட்டம் தேசிய சூரா சபை குர்ஆன், சுன்னாவுக்கு உட்பட்டது போன்ற தோரனையை உண்டாக்குகின்றது.
ஆனால் உண்மையில் தேசிய சூராவுக்கும் குர்ஆன், சுன்னாவுக்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படையாகவே தெரியும் உண்மையாகும். கலந்து ஆலோசனை செய்யுங்கள் என்ற குர்ஆன் வசனங்களை அட்டைப் படத்தில் வெளியிட்டால் மாத்திரம் குர்ஆன் சுன்னாவுடன் இணைத்த இயக்கம் என்பது பொருளல்ல. மாறாக குர்ஆன், சுன்னாவுக்கு மாற்றமானவர்களுடன் இணையாமல் தனித்து நின்று சாதிப்பதே குர்ஆன், சுன்னாவுடன் இயங்கும் ஓர் இயக்கத்தின் இலக்காகவிருக்கும்.
ஜம்மிய்யதுல் உலமா சபை ஏன்?
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவை பலப்படுத்த வேண்டும், அதனுடன் இணைத்து செயல்பட வேண்டும் என்றெல்லாம் பேசியும், எழுதியும் வந்த பலர் தற்போது தேசிய சூரா சபையை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தில் தங்கள் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
உலமா சபையின் ஹழால் பற்றிய முன்னெடுப்பின் வீழ்ச்சியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தேசிய சூரா சபை அமைப்பாளர்களைப் பொருத்தவரையில் ஜம்மிய்யதுல் உலமாவின் சன்மார்க்க வழிகாட்டலுடனும், ஒத்துழைப்புடனுமே தேசிய சூரா அமைகின்றது என்று பிரஸ்தாபிக்கின்றார்கள்.
உண்மையில் ஜம்மிய்யதுல் உலமாவின் வழிகாட்டலுடனும், ஒத்துழைப்புடனும் தான் தேசிய சூரா சபை அமைகின்றது என்றால், புதிதாக ஒரு தேசிய சூரா சபையை உருவாக்குவதற்கு பதிலாக உருவாகியுள்ள அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவையே இவர்கள் அனைவரும் பலப்படுத்தும் வேலையை பார்க்கலாமே?
என்னதான் சூரா சபை உருப்பினர்கள் மறுத்தாலும் இதுவொரு 1001 வது இயக்கம் தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தேசிய சூரா தொடர்பில் எழும் சில பதிளில்லாக் கேள்விகள்.
தேசிய சூரா சபை தொடர்பாக எழும் சில கேள்விகளை இங்கு நாம் பட்டியலிடுகின்றோம். காரணம் இந்த கேள்விகளுக்கு தேசிய சூரா அமைப்பாளர்களினால் சரியான பதில் தர முடியாது என்பதே உண்மை.
தேசிய சூரா சபை ஜம்மிய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் தான் இயங்கும் என்றால் ஏன் ஜம்மிய்யதுல் உலமா தவிர்த்த இன்னொரு இயக்கம் தேவைப்படுகின்றது? ஜம்மிய்யதுல் உலமாவையே பலப்படுத்தும் வேலையை இந்த சூரா உருவாக்குணர்கள் செய்யலாமே?
தேசிய சூராவில் இணையும் இயக்கங்கள் சுதந்திரமாக தமது செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்த சூரா சபை அனுமதியளிக்குமா? அல்லது இவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும் என்று கட்டளையிடப்படுமா?
பொதுப் பிரச்சினைகளின் போது சூரா சபையில் இணையும் இயக்கங்கள் தமது சுய முடிவின்படி ஏதாவது ஒரு முடிவை செயல்படுத்த முடியுமா?
அல்லது சூரா சபை சொல்லும் முடிவைத் தான் எடுக்க வேண்டுமா?
தமது சுய விருப்பப் பிரகாரம் ஒவ்வொரு இயக்கமும் முடிவெடுக்க முடியும் எனில் சூரா சபைக்கு என்ன வேலை?
இல்லை இல்லை சூராவின் கருத்தைத் தான் இயக்கங்களும் முடிவாக எடுக்க வேண்டும் எனில் இயக்கங்களை கலைத்துவிட்டே சூரா சபை என்ற ஒரு இயக்கத்தில் ஐக்கியமாகலாமே?
உலமா சபையின் சன்மார்க்க வழிகாட்டலோடுதான் சூரா சபை இயங்கும் என்றால் உலமா சபை என்ற சபை எதற்காக?
உலமா சபையை கலைத்துவிட்டு அனைவரும் சூராவில் இணையலாமே?
முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்படுவதாக கூறப்படும் சூரா சபையில் கப்ரு வணங்கும் தரீக்கா வாதிகளும் உள்ளடங்கியுள்ளார்களே?
காட்டிக் கொடுப்பவர்களையே கூட்டி வைத்துக் கொண்டு சூரா செய்தால் அதில் என்ன இலாபம் நமக்குக் கிடைக்கப் போகின்றது?
சூராவின் பெயரால் சில பச்சோந்திகள்.
சூரா சபை என்ற பெயரில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், பொதுப் பிரச்சினையை ஒன்றாக எதிர் கொள்ள வேண்டும் என்று பேசியும், எழுதியும் வருபவர்களில் முன்னிலையில் நிற்பவர்களில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சில முக்கியஸ்தர்களும் அடக்கம். பளீல் நளீமி, அகார் முஹம்மது போன்றவர்கள் இதற்காக குரல் கொடுக்கும் வேலையைப் பார்க்கின்றார்கள்.
இவர்கள் நிறம் மாறும் பச்சோந்திகள் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
காரணம் பொது பல சேனாவின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் அகோரமாக இருந்த நேரத்திலேயே ஒன்றினைத்து செயல்படுவோம் வாருங்கள் என்று இவர்களை நாம் அழைத்த நேரம் வர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள் தாம் இவர்கள். இவர்களின் தலைமையகமான தாருல் ஈமானில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் இதனை தெளிவாக இவர்கள் குறிப்பிட்டு சமூகத்திற்காக போராடுவதிலிருந்து பின்வாங்கினார்கள்.
தற்போது தங்களில் அற்ப அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்காக சூரா சபையின் பெயரால் காய் நகர்த்தும் வேலையை இந்த பச்சோந்திகள் முன்னெடுக்கின்றார்கள் என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் பிரிவினை வாதிகளா?
சூரா சபையில் இணையாமல் தனியாக நாம் நமது செயல்பாடுகளை முன்னெடுக்கும் போது நம்மை சிலர் பிரிவினைவாதிகளாக சித்தரிக்க முனைகின்றார்கள். இவர்கள் யார் என்பதை பொது மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
ஆம் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதத் தீ இலங்கையில் மூட்டப்பட்ட வேலை அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை எதிர்கொள்வோம் என்று கூறி பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு எம்மை இவர்கள் அழைத்தார்கள்.
குறிப்பாக முஸ்லிம் கவுன்சிலில் என்ற இயக்கத்தின் தலைமையில் கூட்டப்பட்ட இக்கூட்டங்களில் நாம் கலந்து கொண்டு இனவாதத்தை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினோம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்த கருத்துக்களையெல்லாம் அனைத்து அமைப்புகளும் ஆதரித்ததுடன், அதுவே இறுதி தீர்மானமும் ஆனது. ஆயினும் குறித்த தீர்மானத்தை மசூரா ஏற்பாட்டாளர் முதல் அனைவரும் மீறினார்கள். அவரவர் விருப்பத்தில் நடந்து கொண்டார்கள். இறுதியில் ஹலால் விவகாரமும் தோல்வியில் முடிந்தது. சமூக பிரச்சினையின் போது இணைந்து செயல்படுவதற்கு அழைத்தவர்கள் இறுதியில் அதனை நிறைவேற்றாமல் தீர்மானத்திற்கே மாற்றம் செய்தார்கள். எனவே சமூக பிரச்சனையின் போது இணைந்து செயல்படுவது என்பது கூட ஒரு ஏமாற்றம் என்பதை தெளிவாக இவர்கள் உறுதிபடுத்திவிட்டார்கள்.
இதன் பின்னர் கூட குறித்த ஒவ்வொரு அமைப்புடனும் தனித்தனியாக இது தொடர்பாக நாம் மசூரா செய்தோம். சிலர் நம்மோடு மசூரா செய்தார்கள். சிலர் புறக்கனித்தார்கள். இவ்வாறு பிரச்சனை நீடித்துக் கொண்டேயிருந்தது. இறுதியில் இனவாத்திற்கு எதிராக தைரியமாக நாம் தனியாக களம் இறங்கினோம். இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு அறிவுப்பூர்வமாக பதில் கொடுத்தோம். சமூக பிரச்சனைகளுக்கு தெளிவான பதில் சொன்னோம். முஸ்லிம்களுக்கு எதிரான சதி வலையை முரியடித்துக் காட்டினோம்.
இனவாதிகளுக்கு எதிராக பகிரங்க விவாத அழைப்பும் ஜமாத்தினால் விடுக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு இனவாதிகளுக்கு எதிராக தைரியமாக அறிக்கைகள் விடப்பட்டது.
போலியான சமரசத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரியை எதிரியாகவே பார்த்தோம். பாதுகாப்பு அமைச்சு வரை சென்று பொது பல சேனாவுக்கு எதிரான புகார்கள் தைரியமாக ஜமாத்தினால் முன்வைக்கப்பட்டது.
இன்று ஒற்றுமை பேசுபவர்கள், சூராவின் பெயரால் ஒரு இயக்கக் குடையின் கீழ் இணங்குமாறு கோரிக்கை வைப்பவர்கள். இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்காத்து மட்டுமன்றி, குரல் கொடுத்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தையும் தெளிவாக விமர்சித்தார்கள், மவுனம் காத்தார்கள். மீண்டும் மீண்டும் நோன்பு நோற்குமாறு சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஓதச் சொன்ன குனூத்தைக் கூட வாபஸ் வாங்கினார்கள். ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு தடவை தீண்டப்படமாட்டான் என்பது நபிமொழி. எனவே இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து நாம் மீண்டும் மீண்டும் ஏமாற விரும்பவில்லை.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்றும் ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில் தனித்தே செயல்படும் . நாம் கொள்கையை நிலைநாட்டுவதற்காக களம் கண்டவர்கள். கொள்கையை அடகு வைத்துவிட்டு சமுதாய பிரச்சனைகளை பேச மாட்டோம். ஏகத்துவம் என்பது எங்கள் உயிர் மூச்சு. அதை நாம் இறுதி வரை பாதுகாப்போம். எந்நிலையிலும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க மாட்டோம். மார்க்கத்தை விட்டு கொடுக்க மாட்டோம். இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை என்றென்றும் தெளிவாக பின்பற்றுவோம். சத்தியத்தை மாத்திரம் சொல்லுவோம். அசத்தியத்தை ஒழித்துக்கட்டுவோம். கொள்கையில் சமரசம் செய்ய மாட்டோம்.
இந்த சூரா சபையில் நாமும் இணைந்து செயல்படுவதற்கு இதுவொன்றும் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. எல்லா குப்பைகளையும் இந்த சூரா சபை இணைத்துக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இவர்களின் கொள்கை. இது தெளிவான வழிகேடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முரண்பாட்டில் உடன்பாடு காண்பது என்பது அசத்தியவாதிகளின் கொள்கையாகும். பல பாதைகளை சரிகாண்பது திருக்குர்ஆனுக்கு எதிரானதாகும். எனவே இவர்களுடன் நாம் ஒருக்காலும் சேர முடியாது.
தவ்ஹீத் பெயர் தாங்கிகளும், சூரா சபையும்.
இலங்கையில் இயங்கும் சில தவ்ஹீத் பெயர் தாங்கி கம்பணிகளும் இந்த சூரா சபையில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக இணக்கம் தெரிவித்துள்ளதை பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறிய முடிகின்றது.
உத்தேச சூரா சபை உருவாக்க தினத்தில் சிறப்பு விருந்தினராக JASM இயக்கத்தின் பிரச்சாரகரான இஸ்மாயீல் ஸலபியும் கலந்து கொண்டார்.
பொது பல சேனாவின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக ஒன்றிணைத்து போராடுவதற்கு இவர்களை நாம் அழைத்த வேலை நம்மோடு இணைய மறுத்த போலி தவ்ஹீத் வாதிகளான இவர்கள் தற்போது இனத்தோடு இனம் சேர்ந்ததைப் போல் இணைந்து கொண்டமை ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
அதே போல் இன்னும் சில பெயர் தாங்கி தவ்ஹீத் இயக்கங்களும் இவர்களுடன் இணைவதற்கு ஒத்துக் கொண்டுள்ளதை நாம் அறியக் கிடைக்கின்றது.
எது எப்படியோ ஒன்றுக்கும் பயனில்லாத பல இயக்கங்கள் இருக்கும் இலங்கை நாட்டில் பத்தோடு பதினொன்றாக சூரா சபை என்ற பெயரில் ஒரு இயக்கமும் இணைந்து கொள்கின்றது என்பதுதான் இப்போதுள்ள புதிய செய்தி.
'Thaw' kaararkal wilaki nitpadhu romba nallathaap pochchu.
ReplyDeleteThis is not surprise SLTJ naver joined with others. it is advisable to do their job themself. Dont go any argument with them.They are the only one blessed for paradise ?
ReplyDeleteJASM, thowheedh jamath rendum veraya nalla vela sonninga .....
ReplyDeleteAgain Thawheed jamath show that they are the one and only divider (Pirivinai wathihal) in muslim umma,
ReplyDeleteMay be they will fear that they will lose all their foreign fund if they join this sura
I really hate this thowheed jamath people, they will work only for money,
Thats why they create problem specially during the Ramadan to get more money from kuwait, if no money they will die
They want only deviding society not unity....
ReplyDeleteUnity among diversity or diversity among unity? Why can't Sura Council strength ACJU as how Omar did it on Abubak'r(May Allah be pleased with them)? We must know that nobody is perfect. Why can't work Sura Council and Thowheed Jamaath under the oneness leadership of ACJU? Does ACJU not listen to otehrs? Sri Lanka Muslim community expect examples from Ulamas.
ReplyDeleteTHAMAKKULLAHAVE 4 PIRIVUHALAHA PIRINTHU POI IRUKKUM IVARKALIDAM MULU SAMOOHATHTHAIYUM ORUNGINAIKA WENDUVATHU KOMALITHTHANAM. IPPOTHU THAWHEED JAMATH EANDRU SOLLIKKOLLUM ORU SAHOTHARIDAM NEENGAL EANTHA THAWHEED EANDRU KETTAL PATHIL SOLLA THERIYADAVARHALAHA IRUKKIRARHAL.
ReplyDeletedear sns, u talking about JASM. they doing work for foreign currency not SLTJ. I think u don't have any ideas about SLTJ. so try to find about them well then come to comment pls.
ReplyDeleteHow do we expect an Islamic leadership under a man who defy the party leadership for a petty gain.(Counsellor General to a Middle eastern Country)He has come forward to the media at the time of Sex scandal of his leadership and exposed. As a Muslim, Does he has any moral right to do so according to Quran and Sunnah.
ReplyDeleteHow they going to cooperate with the people, Those who are closely associate with BBS to Attacked the Wahhabies. Whatever the accusation BBS has raised against Muslim is not from their own, It's an inside job. I can point out the name of person now , But the comments will not be appeared. If you need any further information in regard to this Hypocrite, Contact the SLTJ.
Quranic verses:
ReplyDelete"And obey Allah and His Messenger, and do not dispute with one another lest you lose courage, and your strength depart, and be patient; surely, Allah is with those who are patient."[304]
"Truly, your nation is one united nation, and I am your Lord,"[306] and: "Verily this (your nation) is one nation, and I am your Lord, so keep your duty to Me."[307]
----------------------------------------------------------------
I think SLTJ should choose a moderate path!
Really i am fedup with all of these jamath..either Thawheed, Thableeq or Jamathe Islami.
ReplyDeleteEveryone has forgotton the correct path. if we look at the way, the SLTJ, i agree with them. How Black and white set together?? Thareekka has different concept, how it can align with others??
SLTJ, jamathe Islami, both are same track, same way and same concept, it can align but, thareeka can not be. it is impossible untill they change their concept.
we can not build unity in wrong way, National Shoora, its not going to work, it will further devide the community in to pcs.
with the style of Jamathe Islami, they travelling on long journey with vision. they have to change little bit, i want to see them as SLTJ, when something wrong, they have to come front and say, thats wrong.
And also, i want SLTJ to be shape their strategy, lets put some vision, As our Prophet had, as he prepared Mus'ab ibnu Umair to market Islam in Madinah. Lets align, based on wisdom. empower the society through wisdom.
Insha allah, we will be the Khaira Ummath. Ameen!!!
பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது அவர்களுக்கு எதிராக வாய் திறந்து பேசவே பயப்பட்டவர்கள் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பினால் கடைசியில் ச் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைக்குத் தான் நாம் தள்ளப்படுவோம்.
ReplyDeleteதேசிய ஷுரா சபையில்… “இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பலவும் ஒன்றிணைகின்றன” என்று அதன் அமைப்பாளர்களில் ஒருவர் நம்மிடம் கூறிய போது “ஷீயாக்கள் இதில் அடக்கமா?” என்று கேட்டோம். அப்போது “இல்லை” என்றவர்களிடம் “கப்ரு வணங்கும் தரீக்காக்கள் இதில் இணைகின்றனவா?” என்று கேட்ட போது “ஆம்” என்றார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையில் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து குளிர் காய்பவர்களில் முதல் இடம் வகிப்பது ஷீயா சிந்தனை கொண்ட கப்ரு வணங்கும் தரீக்கா வாதிகள் என்பது ஷுரா கவுன்சில் அமைப்பாளர்களுக்கு தெரியாத விஷயமல்ல.
அப்படியிருக்க இந்த கப்ரு வணங்கிகளையும் கொண்டமைக்கப்படும் ஷுரா சபையினால் இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன நலவு நடக்கப் போகின்றது?http://rasminmisc.com/soora-sabai/#more-2174
Thaw karanka iwanka yarodathan , eppa than , enka than sernthu ponanka? Pirachinai karanga awanga.
ReplyDeleteAwankala edukka wenamdu naankale solla wendiyatha awankale sollitanka. ALHAMDULILLAH
இவர்கள்(சூரா சபை) பற்றி சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியதை ஜப்னா முஸ்லிம் பிரசுரிக்கவில்லை,இந்த கட்டுரையில் 100% உண்மையை போகப் போக அறியலாம்
ReplyDeleteஇலங்கை தவ்கீத் ஜமாஅத் அவர்களின் வெப்சைட் அவர்கள் தவிர்த்த அணைத்து முஸ்லிம்களும் வழிகேடு என சொளியுள்ளதால் ,நான்கால் யாருடனும் சேர மாட்டம் .
ReplyDeleteThowheed jamaath should understand that this shuraa is not to argue about Quraan or sunnah. This is just to voice on behalf of Muslims when the masjids are broken, Muslim ladies are humiliated or an ordinary muslims basic rights are deprived by the highly shouting BBS.
ReplyDeleteI guess thowheed wants to join hands with BBS. If not they will not find reasons to seperate them from other Muslims by talking rubbish and they make most blessed Quran their reasons...Asthagfirlah.
Indha kedu thaan paa ulaga anaithtu Muslimgalukkum... they need to understand that the judgement remain with Allah swt whether who is going to heaven and it is not in the hands of prophet or any other scholars.But it is a must for a Muslim to be united with another. Those who beleive in Allah swt and follow Ibrahim Alai's religion is a Muslim and it is the duty of THowheed Jamath to cooperate with other Muslims.
If not they can join in hands with BBS. All the best for them. Let the moulavi kirama vimalajothi or nchaanasara attain whet they expected.
intha widyata shoora sayya thawailla jamiyatul ulam saydal ok
ReplyDeleteDear bronter SNS, Assalamu Alaikkum................
ReplyDeleteAgain, no... Again and Again even you call hundred thousand times to join with us, we (Thawheed Jamath) never join with such groups.
Brother you should know; Because some groups follow only Quran, some groups follow only Hadees & Imam, some groups follow SALAF as their higher rank people, some groups follow their own ideas etc... So, how can a real Muslim join such groups?
Who said to you that Thawheedh Jamath (SLTJ) would receive Arab country funds?
Can you point out any body who works for that? never, because SLTJ threw those people out
from Jamath since long time.
For your information and check those: JASM, IIRO, Shabab, etc....
May Allah show us always right path!
Hello Reddy Ghaaru! Assalamu Alaikkum............,
ReplyDeleteAs you said that the Judgement remain with only Allah whether who is going to heaven or hell and it is not in the hands of Prophet (pbuh) or others. It is 100% right. But you forgot other one what Allah said and Prophet Mohammed (pbuh) did according to Allah's verses.
What is that? in holy Quran Chapter 3: Verse 32
Say, "Obey Allah and the Messenger." But if they turn away - then indeed, Allah does not like the disbelievers.
We are Muslims so, we need what Allah says about. in the holy Quran and Hadees you can see too many verses such above. First we need to Obey exactly/purely Allah and his Messenger then the others.... if you are not obeying Allah & his Messenger exactly then Allah does not like you. Why we need to join with other groups if they do not want to obey Allah & his Messenger exactly/purely? Because?????
We can bear these groups' criticizes But we can not do any thing unless Allah likes us.