சிரியா யுத்தம் விரைவில் திசைதிரும்பும் - போராளிகள் நம்பிக்கை
தமக்கு புதிய ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் இது யுத்தத்தை திசைதிருப்பும் என்றும் சிரியா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அவசர இராணுவ உதவிகளை வழங்க மேற்கு மற்றும் அரபு நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. கட்டாரில் சனிக்கிழமை கூடிய சிரியாவின் நட்பு நாடுகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 11 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்த இந்த கூட்டத்தில் “களத்தில் இருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க” இணக்கம் காணப்பட்டது.
கடந்த சனிக்கிழமை கூடிய சிரிய நட்பு நாடுகள் குழுவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்குவதோடு மறுபுறத்தில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இதில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கான இராணுவ உதவிகள் கிளர்ச்சியாளர்களின் இராணுவ கட்டளையகத்தினூடாக விநியோகிக்க மேற்படி சிரிய நட்பு நாடுகள் இணங்கியுள்ளன.
சிரிய கிளர்ச்சியாளர்கள் அண்மைக் காலத்தில் அரச தரப்பு தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் தமக்கு புதிய ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் இது யுத்தத்தை திசைதிருப்பும் என்றும் கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை கூறியிருந்தனர்.
"விசுவாசங்கோண்டோரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; அவர்களில் சிலர், சிலருக்கு பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களை (அமெரிக்கா, பிரித்தானியா) பாதுகாவலராக்கிக்கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம்; நிச்சயமாக அல்லாஹ், அநியாயக்கார சமூகத்தாருக்கு நேர்வழிகாட்டமாட்டான்" (சூரா அல்மாயிதா – 51)
ReplyDelete