மிக விருப்புக்குரிய அரசியல் தலைமைத்துவம் கொண்ட நாடாக இலங்கை - கோத்தா
(Tm) மிகவும் விருப்பத்துக்குரிய அரசியல் தலைமைத்துவம் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக இலங்கை இருப்பதனால் அரபுவசந்தம் போன்ற எழுச்சிகள் இங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருப்பதனால் அவ்வாறான எழுச்சிகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பம் மிகமிக குறைவாகும்.என்றாறும் இந்தவகையான அச்சுறுத்தலை கண்காணிக்க வேண்டிய தேவையுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேஸ்புக்,டூவிட்டர் போன்ற புதிய சமூக ஊடகங்களின் ஊடாக நாடுகளை குழப்புவதற்கான ஆற்றல்களை கொண்டிருக்கின்றன என்பதனை டுனீஷியா, லிபியா மற்றும் எஃப்து போன்ற நாடுகளில் கண்டிருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி பாடநெறிகளுக்கான ஆரம்ப விழாவில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஆட்கள் தேவையில்லை, எனவே இவர்களை பாரம்பரிய தேசிய பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே,புலனாய்வு அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அமைப்பின் கீழ் வேலை செய்வது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
சீனா,ரஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகளுடன் தற்போதுள்ள நல்லுறவை மேலும் பலப்படுத்திக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டோ அதிகாரமுள்ள இந்த நாடுகள் இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைககள் மீது செல்வாக்கு செலுத்தவல்லன என்றும் அவர் தெரிவித்தார்.
Very funny....
ReplyDeleteI thai sahala ina makkalum kooravendum neengalaha koorikkondal pothathu.
ReplyDeleteஆமாம்!
ReplyDeleteஉலகின் மிக உயரமான இடம் மரியானா அகழி...
உலகின் மிகவும் அதிக ஆழமான இடம் எவெரெஸ்ட்...
உலகின் மிகப்பெரும் கொலையாளி மகாத்மா காந்தி... உலகம் கண்ட மிகப்பெரிய கருணையாளன் ஹிட்லர்....!