Header Ads



அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பில் ஏறாவூரில் பிரான்ஸ் தூதுவர்


(அப்துல்லாஹ்)

பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் Christine Robichon) ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானாவின் நட்புறவுடனான அழைப்பை ஏற்று நேற்று ஏறாவூர் நகருக்கு வருகை தந்தார். இதன்போது ஏறாவூர் நகர அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

உள்ளுராட்சி சபைகளுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கின்ற திண்மக் கழிவகற்றல் சம்பந்தமான முறையான திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அலிஸாஹிர் மௌலானா ஐரோப்பிய யூனியனிடம் ஏற்கெனவே முன்வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விடயமும் பிரான்ஸ் தூதுவருடனான நேற்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பிடித்திருந்ததாக நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் ஏறாவூர் வாவிக்கரையோர சிறுவர் பூங்காவிற்கும் சென்று வாவிக் கரையோர அழகுபடுத்தல் திட்டத்தையும் பார்வையிட்டார்.



No comments

Powered by Blogger.