'சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்' சிறிய குழந்தைகள் ஊர்வலம்..!
(ஏ.எல். ஜுனைதீன்)
உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவ, மாணவிகள் “சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இன்று 5 ஆம் திகதி புதன்கிழமை பாடசாலையிலிருந்து வீதியில் சென்று ஊர்வலம் ஒன்றை நடாத்தினர்.
இந்த ஊர்வலத்தின் போது பாடசாலை மாணவர்கள் “எதிர்காலச் சந்ததிக்காக சுற்றாடலைக் காத்திடுவோம்” “சுற்றாடல் எம்மைக் காக்கும். நாம் சுற்றாடலைக் காப்போம்” என்பன போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்தனர். சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இம்மாணவர்களின் ஊர்வலம் சென்றது.
Post a Comment