Header Ads



கிழக்கு ஆளுநரின் அராஜகம் - மாகாண சபை உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு குறித்து ஆலோசனை

 
கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் அதன் ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டுவருவதாக மாகாண சபையின் உறுப்பினர்கள் தமது விசனத்தையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாண அளுநரின் இந்த தலையீடுகளை கண்டித்து இந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தையும் மாகாண அமைச்சர்கள் கட்சி பேதமின்றி பகிஷ்கரித்திருந்தனர். இதுதொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தமது அதிருப்தியை வெளியிடவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அறியவருகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாண சபை அமைச்சரவை அதிகாரங்களில் மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம தலையீடு செய்வதுடன், அமைச்ரவை மேற்கொள்ளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தலையீடு மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் கிழக்கு மாகாண சபை இயங்கா நிலையில் காணப்படுவதாகவும், ஆளுநரின் அராஜக நடவடிக்கை தொடருமாயின் கட்சி பேதமின்றி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரிப்பது குறித்து ஆலோசித்து வருதாகவும் ஜப்னா முஸ்லிம் இணைதய்திற்கு அறியவருகிறது.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்தும் மாகாண ஆளுநரின் தலையீடுகளை கண்டிக்கக்கூடிய நிலையில் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. எப்படி அவர் கண்டிப்பார்..? கண்டித்தால் தண்டிக்கப்படுவார்!

    அரசுக்கு முட்டுக் கொடுத்து அமைச்சர் பதவிகளைப் பெற்ற உங்களுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.