காத்தான்குடி பள்ளிவாசலில் புலிகள் செய்த கொடூரங்களை பிரான்ஸ் தூதுவர் பார்வையிட்டார்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
1990 ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர் பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டது மட்டுமன்றி பள்ளிவாயலில் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தற்போது குறித்த பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment