Header Ads



முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை நாட்டில் பெரும்பான்மை    சமூகத்திற்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இந்த நாட்டிலே வாழ்கின்ற எல்லா சமூகத்திற்கும் இருக்கின்றன என்பதை எமது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த 4000 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மூன்று தசாப்த கால கொடூர யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டிலே அமைதியான சூழ்நிலை ஏற்பாட்டு சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் அரசாங்கத்திற்கும் ஏனைய சமூகங்களுக்கும் மத்தியில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியிலும் ஒரு இனத்திற்கும் மற்றொரு இனத்திற்கும் மத்தியிலும் பொய்யான வாந்திகளைப் பரப்பி பிரச்சினைகளை ஏற்படுத்த சில தீய சக்திகள் முனைகின்றனர்.

இதில் முஸ்லிம்களாகிய நாங்கள் ஏமாந்து விடக்கூடாது.இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பாரிய கவனமெடுத்து வருகின்றது.

இந்த நாட்டில் சகல இனத்தவர்களும் ஒரு தாய் மக்கள் என்ற ஜனாதிபதியின் வாசகத்திற்கேற்ப வாந்திகளை நம்பாமல் நாமெல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

இந்நாட்டில் பெரும்பான்மை    சமூகத்திற்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இந்த நாட்டிலே வாழ்கின்ற எல்லா சமூகத்திற்கும் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை என்றார்.

இந்நிகழ்வில் சவுதி அரேபிய நாட்டில் இருந்து வருகைதந்த டாக்டர் அய்மன்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்,அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி), ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் தலைவர் குறைஷ் உட்பட ஹிறா பௌண்டேஷன் நிறுவன பிரதிநிதிகள் உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


7 comments:

  1. ஜனாதிபதி எங்கு உறுதிப்படுத்தியுள்ளாரோ நாங்களும் தெரிந்துகொள்ளலாமா?

    ReplyDelete
  2. இப்படியெல்லாம் பேசினால்தான், நீங்க இந்த பதவியில் இருக்கலாம் முடிந்தால் உங்கள் ஜனாதிபதியை வருகிற நோன்பு முடியும் மட்டுமாவது பொது பல சேனாவை முஸ்லிகளுக்கு எதிராக எதுவும் பேசவேண்டாம் என்று அவரது வாயால் பகிரங்கமாக கூறசொல்லுங்கள் முடியுமா? முடியுமா ?

    கடந்த ரமழானில் கிரீஸ் பூதத்தால் முஸ்லிம்கள் நோன்பு கால இபாதத் செய்ய முடியவில்லை, இவ்வருடம் இந்த BBS நடவடிக்கையால் வட கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் நோன்புக்கு சஹருக்கு எழும்பினாலும் இருட்டில் சாப்பிட வைப்பானுகள் காத்தான்குடி மட்டுமல்ல முஸ்லிம்கள் வாழ்வது.

    ReplyDelete
  3. இதில் உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். சார் இந்த பொலப்பும் வாழ்வும் உங்களுக்கு தேவைதான. நமது எதிர்கால சந்த்ததியினரின் உரிமைகளை காவு கொடுத்து ( விற்று, சாகடித்து ) தான் நீங்கள் வாழ வேண்டுமா?

    மக்களே உண்மையில் இவர்களை போன்றவர்கள் தான் ராஜ பக்ச வை விட மோசமானவர்கள்.

    ReplyDelete
  4. முஸ்லீம்களாகிய எங்களுக்கு பேரினவாதிகளுக்குக்கூட அத்தனை பயமில்லை. எங்கள் பயமெல்லாம் உங்களைப்போன்றவர்களை எண்ணித்தான்.

    புரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  5. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த ஊரிலே, ஊரிலே!!

    ReplyDelete
  6. என்னா சேர் முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள், சும்மா ஓரிடமிருந்தால் அங்கே படை முகாம் கேம்ப் அடிக்கிறார்கள்.

    பாலமுனையில் ஐஸ்வாடி சும்மா கிடக்கிறது என்பதற்காக கடல்ப் படை முகாமாம். முஸ்லிம்கள் எப்படி அஞ்சாமல் இருப்பார்கள்?
    சும்மா, எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக கண்டதையெல்லாம் சொல்லாம வாய்மூடி இருந்தால் போதும். மற்றவர்கள் பேசுவார்கள்.

    ReplyDelete
  7. மேதகுவின் பாதம் பணியும் பிரதியமைச்சரே.. !

    "பொது பல சேனா" என்று முஸ்லிம் சமூகத்திற்கெதிராக ராஜபக்ஷ அரசு பெற்றெடுத்துள்ள அந்த தீய பிறப்பைக்கூட உம்மால் பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இருக்கும்போது சம உரிமை பற்றி என்ன பிதற்றுகின்றீர்?

    தம்புள்ளயில் பள்ளிவாசல் என்ற ஒன்றே இருக்கவில்லை என்று மாத்தளை மாவட்டச் செயலாளர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றாரே.. முதலில் அவரிடம் சென்று சகல இனங்களுக்கும், மதங்களுக்குமான உரிமையைப் பற்றிப் பேசுவீராக!

    அப்பள்ளிவாசலில் ஒரு தகரம் கூட சேதமாக்கப்படவில்லை என்று குருடன் போல் சாட்சி சொன்ன அன்றே முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கு ஆப்பு வைத்தாயிட்டு.. இதற்குக் கிடைத்த கௌரவம்தான் இன்றைய பொருளாதார பிரதி அபிவிருத்தி! இதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உமது கடமையன்றோ..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.