கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்களுக்கு புத்துணர்வூட்டும் நிகழ்ச்சி
(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களமானது அரச அலுவலர்களின் வளர்ச்சிக்கு தேவையானதும் பயனுள்ளதுமான பயிற்சி நெறிகளை வழங்கி வருவதுடன், இம்மாதம் கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ உதவியாளர்களுக்கு, புத்துணர்வூட்டும் நிகழ்ச்சியாக புதுமுக பயிற்சிநெறி ஒன்றினை தமது கேட்போர் கூடத்தில் நடாத்தியது என்பதை, முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ஏ.எஸ்.எம். பாயிஸ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சி வகுப்புகள் இளைஞர் யுவதிகளை ஊக்குவிப்பதுடன் நிர்வாக நடைமுறைகளை வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் பொருத்தமானதாகவும் அமைந்து காணப்பட்டது.
இப்பயிற்சி நெறிகள் அனுபவம் மிக்க அறிவாளர்களான கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம கணக்காளர்கள் போன்ற உயர்பதவி வகிக்கும் சிறந்த வளவாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
தேடுதலுடனும் ஆர்வத்துடனும் இப்பயிற்சி வகுப்புக்களில் முழுமையாக கலந்து கொண்ட 33 முகாமைத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு அன்சாரினால் வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment