Header Ads



யாழ். கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் விளக்கம்..!

(பாறூக் சிகான்)

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்த முயல்வதாகவும் .எனவே இது தொடர்பாக  பொதுமக்களிடம் கடந்த மாதம் மாதம் முதல் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அறிவிப்பதாக சம்மேளனத்தின்  செயலாளர் ஆர்.கே. சுவர்கஹான்  தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களும், சமூக அமைப்புக்களும், உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாக சபைகளும், யாழ் மாநகர சபை உறுப்பினர்களும், சமூக நலன் விரும்பிகளும், புத்திஜீவிகளும் என்ற அடிப்படையில் யாழ் முஸ்லிம் சமூகத்தின் மிகமிக முக்கிய பிரமுகர்களே! இந்த சம்மேளனத்தில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம்; மக்களின் மீள்குடியேற்றத்திற்காகவும், அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

இப்பிரதிநிதிகளுள் சமூக நலனுக்காக தங்களின் சொந்தப் பணத்தினை தன்னலம் பாராது பொது நலனுக்காக செலவு செய்து, தியாக சிந்தனையோடு செயற்படுவர்களும் இலைமறை காய்களாக இருக்கத்தான் செய்கின்றனர். இதுபோன்று அல்லாஹ்வின் அருட்கொடையினை, சிறப்பான நிஹ்மத்தினை பெற்றுக்கொண்டவர்கள் அதனை பயன்படுத்தி தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் பிரவேசத்திற்கும் வழித்தேடும் ஒரு சிலரும் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இருக்கத்தான் செய்கின்றனர்.

எந்த நாட்டிலும், எந்த சமூகத்திலும் சமூக விரோத செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறு இல்லாத சமூகத்தையோ, நாட்டையோ காணமுடியாது.  அதனை எமது சமூக மட்டத்தில் தீர்வுகண்டு, ஒரு நேரான வழியினை  சமூகத்திற்கு காட்டுபவனே ஒரு சிறந்த சமூகப்பற்றாளன் ஆவான். அதனை விடுத்து எமது சமூக பிரதிநிதிகளின் குறைகளை சர்வதேச அளவிற்கு அம்பளப்படுத்தி, எமது சமூகத்தை சர்வதேச மட்டத்தில் அசிங்கப்படுத்துவது முறையல்ல, இது அண்ணார்ந்து பார்த்து உமிழ்வதற்கு ஒப்பாகும்.

சம்மேளனமானது யாழ் கிளிநொச்சி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காகவும், அபிவிருத்திகாகவும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எத்தனையோ தடைக்கற்களைத் தாண்டி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஒரு சவாலாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில்  மக்களின் பல தேவை நிறைவிற்கு சம்மேளனம்  மக்களால் எதிர்பாக்கப்படுவதை உணரக்கூடியதாகயுள்ளது. 

எனவே இச்சம்மேளனமானது அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும். அண்மைக்காலத்தில் (2013.05.25அன்று) சம்மேளனத்தின் ஸ்தாபக செயலாளர்  என்ற பதவி பெயரினைப் பயன்படுத்தி யாழ் முஸ்லிம் இணையத்தளத்தினூடான செய்தி வெளியீடானது. சம்மேளன பிரதிநிதிகள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் பெரும்  குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது. 

(மேற்படி தீர்மானம் எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தல் நிலைமைகளை அணுசரித்து மேற்கொள்ளப்பட்டது) என்ற ஸ்தாபக செயலாளரின் செய்தி வரி வெளிப்படுத்தும் கருத்திற்கு இணங்க அக்கூட்டத்தில் எந்த தீர்மானமும் எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலுக்கு சாதகமாக எடுக்கப்படவில்லை. இதன் பின்னனியில் சம்மேளனத்தை அரசியல் பக்கம் இழுக்கும் முயற்சி ஒன்று மறைமுகமாக நடைபெறுகின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

எனவே இவ்வாறான தூரநோக்கற்ற  சிந்தனை செயற்பாட்டில் இருந்து சம்மேளனத்தை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், குழப்பநிலையில் இருக்கும்  யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மக்களுக்கு மேற்படி விடயம் தொடர்ப்பில் சரியானத் தீர்வினை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பும், கடமையும் சம்மேனத்தின் புதிய நிர்;வாதையே சேரும். 

இதனடிப்டையி;ல் 2013.05.27ம் திகதி சம்மேளனத்தின் நிர்வாக சபை கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் தொடர்பான செய்தி வெளியீடுகள்  தற்போதைய நிர்வாகத்தின்  பரிசீலனைக்கும், பரிந்துரைக்கும் உட்படுத்தப்பட்ட பின் அவர்களின் அங்கீகாரத்துடன்  வெளியிடப்பட வேண்டுமென்ற  முடிவையும், சம்மேளனமென்ற அமைப்பிற்குள் ஸ்தாபக செயலாளரென்றோ, ஸ்தாபக தலைவரென்றோ பதவிகள் நடைமுறையில் இல்லை என்பதையும், குறிப்பிட்ட இச்செய்தியை இணையளதளங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்ற முடிவும் எடுக்கப்பட்டது.
 

1 comment:

  1. யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் புதிய செயலாளர் “சம்மேளனத்தில் சமூக விரோதிகள் இருக்கின்றார்கள்” என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் திருந்தி நேர்வழிப்படுத்துவதற்கு முயலவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். இதன் மூலம் சம்மேளனத்தின் ஸ்த்தாபக செயலாளரின் உரையினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சமூக விரோதிகள் என்று பன்மையில் சொல்வதை விட ஒருமையில் சமூகவிரோதி என்று குறிப்பிடுவது மிகவும் பொறுத்தம், கடந்த 3 வருடங்களாக குறித்த சமூக விரோதி நேர்வழிப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் அது திருந்திய பாடில்லை, சமூகத்தை அழித்து குட்டிச்சுவராக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார். உங்களது இந்த பதிலும் குறித்த சமூகவிரோதியின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடிப்பதாகவே இருக்கின்றது?
    சம்மேளனத்தின் “ஸ்த்தாபக செயலாளர்” என்னும் பதவி நிலையானது இனியெப்போதும் எவராலும் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது. அதற்குப் பின்னால் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தூய நோக்கமும் இருக்கின்றது. சம்மேளம் உருவாகுவதில் காட்டிய அக்கறை, உருவாக்கப்பட்ட சம்மேளனத்தை மிக நேர்த்தியாக வழிகாட்டி இதுவரை காலமும் ஒத்துழைக்கின்றமை, இன்று நீங்கள் எல்லாம் சம்மேளனம் ஒரு பொக்கிஷம் என்று கூறுவதற்கு வழிசமைத்தமை, தேசிய சர்வதேசிய மட்டத்தில் சம்மேளனத்தைக் கொண்டு சென்றமை, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தமை என அவரது பங்களிப்புகள் ஏராளம்.
    அந்தவகையில் அவர் ஒரு கருத்தை சம்மேளனத்தின் சார்பாக முன்வைக்கின்றார் என்றார் அதில் சம்மேளனத்திற்கும், சமூகத்திற்கும் நன்மையளிக்கின்ற ஏராளனமான விடயங்கள் இருக்கும். கடந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தல் குறித்துப் பேசப்படவில்லையா? பேசப்பட்டது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தெரிவு முறையிலும் தேர்தலை அணுசரித்து மேற்கொள்ளும்படி அங்கத்தவர்கள் கேட்கப்பட்டார்கள். அதன் அர்த்தம் சம்மேளனத்தை அரசியலுக்கு இழுத்தல் என்று அர்த்தமாகாது. நாம் மிகவும் தெளிவாக சம்மேளனத்தின் அரசியல் வகிபாகத்தை வெளிப்படுத்தியிருந்தோம். எனவே தாங்களும் விஷமிகளுக்கு வழிப்பட்டு தங்களது நற்பெயரையும் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.
    யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில் வெளியான செய்தி சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் சமூக விரோதிக்கும் அவர் சார்ந்த ஒரு சிலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்ததே தவிர பொதுவாக மக்களுக்கும் சம்மேளனத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் எதுவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனை அடுத்துவரும் சம்மேளனத்தின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கண்டுகொள்ள முடியும்.
    போதைப்பொருள் பாவனையாளர்கள் சமூகத்தை வழிநடாத்த முன்வருகின்றார்கள் என்பதில் என்ன தப்பு இருக்கின்றது. தூள் கஞ்சா, மதுபானம், கொரெக்ஸ் டீ போன்ற போதைப் பொருள் பாவனையாளர்களை நாங்கள் அடையாளம் செய்யத்தேவையில்லாத அளவுக்கு நீங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றீர்கள், அவர்கள்தான் உங்களுக்கு பக்க பலமாக இருக்கின்றார்கள். எனவே சம்மேளனத்தை வழிநடாத்துவதில் இத்தகைய அசிங்கங்களை அப்புறப்படுத்துங்கள் என்றும் தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
    Mr.M.M.A.Mohideen- Negambo

    ReplyDelete

Powered by Blogger.