அரபுக் கல்லூரிகள் பற்றி பிழையான தகவல்களை பத்திரிகைகள் வெளியீடு
இலங்கையில் இயங்கிவரும் அரபுக் கல்லூரிகளைப் பற்றிய தவறான தகவல்களை சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளமை, இலங்கையின் அரபு மத்ரஸாக்களின் ஒன்றியமான எமக்கு அறியக் கிடைத்துள்ளது. இந்நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகள் எமது ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் பொதுமக்களுக்கு கீழ் வரும் தகவல்களை வெளியிட விரும்புகிறோம்.
· அரபுக் கல்லூரிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் இயங்கி வருகின்றன. இவை நம்நாட்டுக்கு புதியவையல்ல.
· இவை அரச சட்டதிட்டங்களுக்கு அமைய சட்ட ரீதியாகவே இயங்கி வருகின்றன.
· முஸ்லிம் கலாசார திணைக்களம் மூலமாக புத்த சாசன அமைச்சு இக்கல்லூரிகளின் பாடத்திட்டங்களை அங்கீகரித்துள்ளது.
· சனத்தொகை பெருக்கத்திற்கேற்பவும், சமயக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமுமே இக்கல்லூரிகள் வளர காரணங்களாகும். மேலும், எமது அரபுக் கல்லூரிகளின் ஒன்றியத்தின் (Iththihadul Madaris) கீழே இயங்கும் இம்மத்ரஸாக்கள் சட்ட ரீதியாக பதியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், இது பற்றிய தெளிவுகள் தேவைப்படின் அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் செயலாளர் அஷ்ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர் அவர்களை (jawferrahmani@gmail.com) தொடர்பு கொள்ளவும்.
அஷ்ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்
செயலாளர்
இலங்கை அரபு மத்ரஸாக்களின் ஒன்றியம்
what are you doing in the name of Itthihdhul Madaris, only keeping a position for you.
ReplyDelete