பாலமுனை பாறூகின் 'எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு' குறுங்காவிய வெளியீட்டு விழா
(பி. முஹாஜிரீன்)
கலாபூஷணம் கவிஞர் பாலமுனை பாறூக் எழுதிய 'எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு' நவீன குறுங்காவிய நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை (26-06-2013) பி.ப. 3.30 மணியளவில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மொழித் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் சிறப்புரையாற்றியதுடன், கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியர் செ. யோகராசா ஆய்வுரை நிகழ்த்தியதுடன், கவிஞர் மு. சடாட்சரன் வாழத்துரை நிகழ்த்தினார்.
நூலின் முதற் பிரதியை தென் கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன் பெற்றுக் கொண்டதுடன், சிறப்புப் பிரதியை சிலோன் சிப்பிங் லைன்ஸ் நிறுவன முகாமையாளர் எம்.ஏ. நஸீர் மற்றும் கௌரவ பிரதியை அகில இந்திய முகாமைத்துவ கற்கை நிறுவன பணிப்பாளர் கவிஞர் மருதூர் ஏ ஹஸன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கலாபூஷணம் கவிஞர் பாலமுனை பாறூக் கல்முனை அபாபீல் கலை இலக்கிய வட்த்தின் சார்பாக அதன் ஆலோசகர் ஏ. பீர்முகம்மதுவினால் 'பாவேந்தல்' சிறப்புப் பட்டம் வழங்கியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழவில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம். ஏ. அன்ஸில், சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.ஐ. சம்சுடீன், எஸ்.எம்.ஏ. கபூர், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், ஐ.எல்.ஏ. மனாப், எம்.எல்.எம். பாரீன், சிறுவர் நன்னடத்தை உத்தயோகத்தர் எம்.ஏ. வசிர்டீன், கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன், அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபைத் தவிசாளர் ஐ.எல் ஹாஸிம் ஆகியோர் உட்பட கவிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
--
Post a Comment