காலி, கராப்பிட்டியாவில் பதற்றம் - முஸ்லிம்களின் வாழ்விடங்களை தகர்க்க புல்டோசர்கள் தயார்
காலி - கராப்பிட்டி வைத்தியசாலைக்கு முன் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்திய அப்பிரதேசவாசிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
பரம்பரை காணி உறுதிகளை கொண்டுள்ள தம்மை, தமது வாழ்விடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றி, தமது குடியிருப்புகளை துவம்சம் செய்யும் நோக்குடன் பொலிஸ் பாதுகாப்புடன், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளும், கொந்தராத்து காரர்களும் புல்டோசர் சகிதம் காத்து நிற்பதாகவும் அவர்கள் சற்று முன்னர் (இன்று புதன்கிழமை, 12 ஆம் திகதி) தெரிவித்தனர்.
தாம் எப்படியேனும் இந்த குடியிருப்புகளை அகற்றியே தீருவோமெனவும், இது கோத்தாவின் உத்தரவு (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்) எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டுமென பிரதேச முஸ்லிம்கள் சார்பில் பேசிய றியாஸ் குறிப்பிட்டார்.
முஸ்லிம் அரசியல் வாதியெல்லாம் வெறும் டம்மி பீசுப்பா.ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்ல.
ReplyDelete