நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மாதாந்தம் தொடர்ச்சியாக நடாத்திவரும் மக்கள் சந்திப்பு தொடர்பில் இந்த மாதத்திற்கான மாதாந்த மக்கள் சந்திப்பும் பொதுக்கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை (14.06.2013) மாலை 06.45 மணிக்கு கடற்கரை வீதி பொதுமைதான முன்றலில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் அரசியல் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இம்மக்கள் சந்திப்பில் “இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்/ சமகால உள்ளூர் அரசியல் சூழ்நிலையும், நகரசபை முன்னெடுப்புக்களும்” என்ற தலைப்பில் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), சூறாசபை உறுப்பினரான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் சூறாசபை உறுப்பினரும் நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி) ஆகியோர் உரையாற்றவுள்னர்.
எனவே அனைத்து பொது மக்களையும் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.இந்தக் கூட்டம் எமது இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுள்ளது.
மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த கூட்டம் மிகவும் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திப்போம். அரசியலை அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து செய்யும் நீங்கள் எந்த தடைகள் வந்தாலும் ஒரு சிரிது அலவு கூட உங்கள் மனம் தளரக்கூடாது. சத்தியத்தை நிலைநாட்டும் போது சோதனைகள் வரும்,தடைகள் வரும் அதை எல்லாம் தாண்டி சாதிக்கணும் அல்லாஹ் உங்களை பாது காட்பான்
ReplyDelete