Header Ads



பாராளுமன்ற + மாகாண அதிகாரங்கள் குறித்து மஹிந்த, ஹக்கீம் வாதப்பிரதி வாதம்

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், மாகாணசபைகளின் அதிகாரம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சில நிமிடங்கள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது.

அவசர அவசரமாக அரசு இப்படியான திருத்தங்களைச் செய்வது மாகாணசபைகளைக் கலைத்துவிடுவதற்கு ஒப்பானதென இங்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்த தெரிவுக்குழு ஒன்றை அமைத்தாவது முதலில் ஆராய்ந்திருக்கவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் 153/ஜீ என்ற சரத்தை திருத்துவது என்பது மாகாணசபைகளை இல்லாமல் செய்வதற்கான முன்னோடியாகவே கருதவேண்டியிருக்கிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பேராளர் மாநாட்டில் 13ஆவது திருத்தத்தின் எந்த அதிகாரங்களையும் குறைக்கும் விடயங்களுக்கு யாரும் ஆதரவை வழங்கமுடியாதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எனவே, எனது கட்சியுடன் நான் இதனைப் பேசவேண்டும். இதில் உடன்படுவதில் கொள்கை அடிப்படையிலும் எமக்குப் பிரச்சினை உள்ளது. 

எனவே, இதன் அவதானிப்புகளைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்'' என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதையடுத்து, இதனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

4 comments:

  1. எருமை மாட்டின் மேல் மழை பெய்கிறது. காலம் செய்த கோலமடா கடவுள் செய்த குற்றமடா.. கடவுள் செய்த குற்றமடா..

    ReplyDelete
    Replies
    1. Tappu thambi tappu manitharkal saiyum kutraththukku
      ean kadavulai chadukireer

      Delete
  2. அவகாசம் கேட்பார், உயர் பீடத்தைக் கூட்டுவார், மகிந்த சொன்னபடி தீர்மானம் நிறைவேற்றுவார், பின்னர் அங்கீகாரம் வழங்குவார்.
    எல்லாம் படம்.

    ReplyDelete
  3. Dear All
    Even he discuses with others what about other leaders??????

    ReplyDelete

Powered by Blogger.