மாகாணங்களிடமிருந்து காணி + பொலிஸ் அதிகாரங்களை பிடுங்க அதாவுல்லா ஆதரவு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று வியாழக்கிழமை, 13 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது மாகாண அதிகாரங்கள் குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மாகாண அதிகாரங்களை பிடுங்க வேண:டுமென கடும்போக்கு சிங்கள அமைச்சர்கள் ஒருபக்கம் வாதிட்டுக் கொண்டிருக்க மறுபக்கம் அவர்களுடன் இணைந்து மாகாணங்களின் அதிகாரங்கள் நிச்சயமாக பிடுங்கப்பட வேண்டுமென அமைச்சர் அதாவுல்லா வாதிட்டுள்ளார்.
அத்துடன் மாகாணங்களிடமிருந்து அதிகாரங்கள் பிடுங்கப்படக்கூடாது என வாதிட்டுள்ள அமைச்சர்களின் கருத்துக்களுடனும் அமைச்சர் அதாவுல்லா பகிரங்கமாக முரண்பட்டுள்ளார்.
அமைச்சர் அதாவுல்லவின் மாகாண சபைகளுக்கும், அதன் அதிகாரங்களுக்கும் எதிரான இந்த வாதாட்டமானது 'எரிகிற நெருப்பில் பிடுங்கிறது இலாபம்' என்பது போன்று காணப்பட்டதாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அமைச்சர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.
ivan unmaiel madayan thaane
ReplyDelete