காத்தான்குடியில் பாடசாலை வளவில் கழிவு குப்பை பொதிகள் வீச்சு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 ஆற்றங்கரை கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலை வளவிற்குள் நேற்றிரவு (திங்கட்கிழமை இரவு) இனந்தெரியாத நபர்களினால் கழிவுக் குப்பைப் பொதிகள் வீசப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாணவர்கள் மட்டுமன்றி அதிபர்,ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜாமியுழ்ழாபரீன் வித்தியாலய அதிபர் எம்.பாரூக் தெரிவித்தார்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அங்கு ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு பாடசாலையில் இவ்வாறான கீழ்தரமான வேலைகளை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தற்போது பாடசாலை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவுகெட்டவர்களின் வேலைதான் இது, இவர்களுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் பேசுகின்றார்கள் தவிர வேறில்லை.
ReplyDelete