வடமாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி
(மொஹொமட் ஆஸிக்)
நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.
எனினும் சில நேரங்களில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் என அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
இதைத்தான் சேற்றில் நாட்டிய கம்பு என்பதோ , நான் மரம் என்று நினைத்தேன் இப்போது கம்பாகிவிட்டது, அதனால்தான் கோடரிக்காம்புகள் நிறைந்த கட்சியாகி நிற்கிறது . பதவியா கட்சியா தீர்மானியுங்கள் .
ReplyDelete'பழைய குருடி கதவைத் திறவடி'
ReplyDeleteஇப்படித்தான் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் பம்மாத்துக் காட்டி கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு விற்றிருந்தார். இப்போது வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வாங்கவும் விற்கவும் முயற்சிக்கின்றார்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-