Header Ads



கல்முனை கிறீன்ட் பீல்ட் றோயல் வித்தியாலய கட்டிடத்திற்கான அடிக்கல் நடு விழா


(எஸ்.அஷ்ரப்கான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை கிறீன்ட் பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் முதலாவது பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடு விழா  புதன்கிழமை (12) கல்லுாரி அதிபர் எம்.எஸ்.எம். பைஸால்
தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக  திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கௌரவ அதிதியாக  கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாஸீம், மற்றும் விசேட அதிதிகளாக
கல்முனை மாநகர சபை  உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்,  கல்முனை பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பரின் செயலாளர் முஹம்மட் பாறுாக், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி பி.எம்.எம்.பாறுாக், கிறீன்ட் பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர், ஏ.எல்.எம். கபூல் ஆஸாத் ஆகியோரும் பாடகாலை அதிபர்கள், ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சுனாமியால் உயிர், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட கிறீன்ட் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் குடும்பங்களின் பிள்ளைகள் சுமார் ஒன்றரை வருடகாலம் ஒரு நிரந்தர வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் தற்காலிக தகரக்கொட்டில்களிலேயே  இதுவரை  கல்வி பயின்று வருகின்றனர்.


No comments

Powered by Blogger.