அரச முகாமை உதவியாளர் சேவை ஆட்சேர்ப்புச் திறந்த போட்டிப் பரீட்சை முடிவுகள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
அரச முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2012 இன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இப்பரீட்சையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 256 பேர் வெட்டுப் புள்ளிக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 104 பேரும் கிழக்கு மாகாணத்தில் 152 பேரும் இவ்வாறு சித்தி பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56 பேரும் மன்னார் மாவட்டத்தில் 10 பேரும் முல்லைதீவு மாவட்டத்தில் 10 பேரும் வவுனியா மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 39 பேரும் இவ்வாறு வெட்டுப் புள்ளிக்குள் சித்தியடைந்துள்ளனர்.
மாவட்ட அடிப்படையில் வெட்டுப் புள்ளி விபரம் வருமாறு:-
கொழும்பு 147 திருகோணமலை 147
கம்பஹா 145 மட்டக்களப்பு 148
களுத்துறை 150 அம்பாறை 147
மாத்தளை 148 புத்தளம் 141
கண்டி 147 குருணாகல் 147
நுவரெலியா 141 அனுராதபுரம் 147
காலி 148 பொலன்னறுவை 143
மாத்தறை 150 பதுளை 142
அம்பாந்தோட்டை 146 மொனராகலை 142
யாழ்ப்பாணம் 153 கேகாலை 150
மன்னார் 146 இரதினபுரி 150
முல்லைதீவு 145 கிளிநொச்சி 151
வவுனியா 145
Post a Comment