Header Ads



'ஆசிரியை ஒருவரை மண்டியிடவைத்த சம்பவத்தைவிட பாரிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன'

(J.M.HAFEEZ)

மகாவலி கங்கையை வடமத்திய மாகாணத்திற்கு திசை திருப்பியது போல் கடந்த மூன்று தசாப்த காலமாக இளைஞர்களை பலிகொடுத்த கல்வி முறையை திசை திருப்ப அரசு 4000 கோடி ரூபாய்களை செலவிட உள்ளதாக கல்வி அமைச்ர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்.

(26.6.2013) கட்டுகாஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதயாக் கலந்து உரையாற்றும போதே அவர் இதனைத் தெரிவித்தாhர். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,

பதிவாகியுள்ள புள்ளி விபரங்களின் படி 1995ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 15.9 சதவீதமானவர்கள்மட்டுமே சித்தி அடைந்திருந்தனர். எனவே சுமார் 85 சதவீதத்தினர் பாதிக்க்பட்டனர். இது ஒரு பாரிய பிச்சினையாகும். இன்று ஆசிரியை ஒருவரை மண்டியிட வைத்த சம்பவத்தை விடப் பாரிய சம்பவங்கள் அன்று நடந்தன. 1990களில் பலவந்தமாக வீடுகளில் நுழைந்த இளைஞர் கோஷ்டிகள் பாடசாலை அதிபர்களை தமது மனைவி மக்கள் முன்னிலையில் முழந்தாழில் மண்டி யிட வைத்தனர். சில அதிபர்களது தலை மொட்டை அடிக்கப்பட்டது. சில ஆசிரியர்கள் பாடசாலைமுன் மரத்தில் கட்டப்பட்டனர். மாணவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டனர். யாரும் அவர்களை அவிழ்த்து விட்டால் மரண தண்டனை. இப்படியான ஒரு யுகம் பற்றி மறந்து விட்டது.

ஆனால் கடந்த மூன்று வருட காலத்தில் எங்கேயாவது ஒரு மின்மாற்றி(ட்ரான்ஸ்போமர்) கூட வெடிக்கவில்லை. எமது கடந்த 30 வருட வரலாறு இளைஞர்களது குருதியால் எழுதப்பட்டது. அது வடக்கு தெற்கு என்ற வேறு பாடு இன்றி இருதரப்பு இளைஞர்களது குருதியால் அது எழுதப்பட்டது.
இப்படியான பல காரணங்கரள முன்வைத்து மகிந்தோதய திட்டத்தின் கீழ் உயர் தர பரீட்சையில் மாற்றம் கொண்டு வர உத்ததேசித்துள்ளோம். அடுத்த தமாதம் 15ம் திகதி முதல் இது அமுல் படுத்தப்படும். இதன்படி தொழில் நுட்பப் பாடங்கள் கட்டாயப் படுததப்பட்டுள்ளன. அப்பாடங்களில் சித்தியடைபவர்களுக்கு தேசிய தொழில் பயிற்சி தகுதிகாண் மட்டம் 3 (என்.வீ.கிய்வ்) தராதரம் வழங்கப் படும்.

இது தவிர பாடசதலை செல்லவேண்டிய கட்டாய வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்க வங்கியுள்ள கடன் 25 ஆயிரம் கோடி ரூபாயில் 4000 கோடி ருபா கல்விக்ககாகச் செலவிடப'படவுள்ளது. அடுத்த தவணை ஆமை;பமாகும் போது சகல பாடசாலைகளிலும் உயர்தர வகுப்பு களுக்கு மாணவர்கள் நியமிக்கப்படுவர் ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பத்தின்படி 22 படடதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் இருந்து தேவையானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

1977ம் ஆண்டு வரை இலங்கையில் மூடப்பட்ட பொருளாதாரமே இருந்து. அது 1977ன் பின் திறந்த பொருளதாரமதக மாறியதன் காரணமாக வெளி நாடுகளுக்குச் சென்று பண மீட்டுவதும் படிப்பதும் தேவையான அனைத்தையும் இறக்குமதி செய்யக் கூடியதாகவும் இருப்பதன் காரணமாக இன்று தேவைகள் அதிகரித்துள்ளன. பல்கலைக்கழகங்களில் 2020 ம் ஆண்டு முதல் விஞ்ஞான பீடங்கள் மாற்றப்பட்டு விஞ்ஞான தொழில் நுட்ப பீடங்களாக பெயர் மாற்றம் பெறும். பல்கலைக்கழகக் கல்லூரிகள் 25 அமைக்கப் படும். ஹோமாகமவில் 40 ஏக்கர் பரப்பில் நெனோ டெக்னோலோஜி பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று அமைக்கப்படுகிறது. இதிலிருந்து பீ டெக். பட்டதாரிகள் வெளியாகுவர்.  பீ.ஏ, அல்லது பீ.கொம், போன்று இந்த பீ. டெக்கும் அமையும். மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் கையளித்தார்.



No comments

Powered by Blogger.