பிரதமர் மீது 'சண்விச்' வீசிய பாடசாலை மாணவன்
ஆஸ்திரேலியாவின் பெண் பிரதமர் ஜுலியா கிலார்டு. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் மீது `சாண்ட்விச்' வீசப்பட்டது. பிரிஸ்பேன் நகரில் உள்ள பள்ளிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஜுலியா கிலார்டு சென்றார். அப்போது 16 வயது மாணவன் ஒருவன் அவர் மீது சாண்ட்விச் வீசினான். அதற்காக அவன் பள்ளியில் இருந்து 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டான்.
இந்த நிலையில் கான் பெர்ரா நகரில் நேற்று நடை பெற்ற விழாவில் பிரதமர் ஜுலியா பங்கேற்க வந்தார். அப்போது மற்றொரு மாணவன் அவர் மீது `சாண்ட் விச்'சை வீசினார். அது தலைக்கு மேலாக சென்று அவரது காலடியில் வந்து விழுந்தது.
இதைப்பார்த்து ஜுலியா கோபமடையவில்லை. மாறாக பலமாக சிரித்தார். நான் மிகவும் `பிசி'யாக உள்ளதை அறிந்து இந்த `சாண்ட்விச்' வீசப்பட்டதாக கருதுகிறேன் என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
Hi Friends,
ReplyDeleteஅங்கு ஒரு பிரஜை இவ்வாறு நடந்தகொண்டால், 'அவ்வாறு அவனுக்கு அதிருப்தியளிக்கும் விதமாக தனது ஆட்சியில் என்ன தவறு உள்ளது' என்றுதான் யோசிப்பார்களே தவிர தனிப்பட்ட ரீதியிலே பழிவாங்க நினைக்க மாட்டார்கள்.
ஆனால் இங்கு..?
அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அந்த மாணவன் காணாமல் போனவர்களின் பட்டியலிலே கூட இடம்பெறாமல் காணாமல் போயிருப்பான்.